பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
205

14. பஞ்சபத மகாவாக்கியம் தெளட சுவாமிகள் (1862)

பிரமரனந்த சுகத்தை வித்துவான்களைப் போல் துதிக்கின்றதே முத்தி. வேதாகம சாத்திரங்களனைத்தும் ஆராய்ந்து அவற்றில் சொல்லுகிற நிலைகளையெல்லாம் ஏகமாய் அவிரோதமாய் சித்தாந்தப்படுவதே முத்தி. சுருதி வாக்கியங்களில் விளங்கும் பொருளே முத்தி. வாக்கியத்தைக் கொண்டு பொருள் நிச்சயம் செய்தலே முத்தி

15. துறவற உத்தியானம்; முதற்காண்டம், மொழிபெயர்ப்பு: (1896) புதுவை.

இல்லறந் துறவறம் என்னும் இரண்டுவகை யறமுண்டென்று யாவர்க்குந் தெரியுமே. இல்லறமென்பது இல்லிடத்தி லனுசரிக்கத்தகுஞ் சுகிர்தலொழுக்கமாம். உலக சஞ்சாரத்திலும் விசேஷமாய்ச் சமுசார அந்தஸ்திலு முற்பட்டிருக்கிறவர்கள் அநுசரிக்கத்தகுங் கடமைகளும் புண்ணியங்களு மதிலே யடங்கியிருக்கும்.

துறவறமோவெனில் உலகத்தைத் துறந்து விட்டவர்கள் அநுசரிக்க வேண்டிய சுகிர்த வொழுக்காமே. குருக்களுஞ் சந்நியாசிகளுங் கன்னியாஸ்திரிகளும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் புண்ணியங்களும் அதிலே யடங்கியிருக்கும். ஏனெனில் குருக்களுக்குஞ் சந்நியாசிகளுக்கும் பல காரியங்களிலே வித்தியாசமுண்டானாலும் குருக்களும் உலோகத்தைத் துறந்து விட்டு விரத்தராயிருக்க வேண்டியதினாலும் அநுசரிக்க வேண்டிய மற்ற பற்பல புண்ணியங்களிலுைம் இவைமுதலிய பல சம்பந்தத்தினாலும் இவர்களுந் துறவறத்துக்குட்பட்டவர்கள் தானே.

ஆதலா லிப்பிரபந்தத்திற் சொல்லும் பிரதான விஷயங்களெல்லாம் விசேஷமாய்ச் சந்நியாசிகளையுங் கன்னியா ஸ்திரீகளையுங் குறித்துச் சொல்லியிருந்தாலும் பெரும்பான்மையாய்க் குருத்துவத்துக்