பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37

இருப்பது மட்டுமன்றி, அந்த நடை கொச்சைமொழி நடையாகவும் அமைந்துள்ளமை அறியலாம்.

‘கடவுளுக்கு எதிராகச் செய்யும் பாவத்தைக் கடவுளே மன்னிக்க வேண்டும். ஆதலாலே கர்த்தருக்கு மனுஷனைவன் துரோகியுமாய் அவருடைய இஷ்டப் பிரசாரத்தைப் போக்கடித்தவனுமாய் இருக்கையிலே, இப்படிப்பட்ட கர்த்தரானவருக்குப் பாவியினலே பண்ணப்பட்ட குற்றமாகிய பாவத்தை அவர் மாத்திரம் போக்கடிக்கிறதுக்கும் தன் இஷ்டப் பிரசாதத்தை மனுஷனுக்குக் கொடுக்கிறதுக்கும் வல்லவராய் இருக்கிருரொழிய, வேறெ பொருளிலே தேவ இஷ்டப் பிரசாதமானது மனுஷனுக்குப் பிரதான காரணமான மேரையாகக் கொடுக்கப்படலாம் என்றும் அல்லது பாவத்தைப் போக்கடிக்கலாம் என்றும் முழுமதி கெட்டவன் சொன்னால் சொல்லுவா னொழியப் புத்திமானாய் இருக்கிறவன், அப்படிப்பட்ட வார்த்தையைப் பரிகாசத்துக்கு இடமாய் இருக்கிற முதிர்ந்த பயித்தியம் என்று எண்ணிக் கொண்டு வருவான் என்கிறதுக்குத் தப்பாது.’

மக்களோடு மக்களாய்க் கலந்து பழகிய இவரும் பிறரும் பல பேச்சு வழக்குச் சொற்களை அப்படியே ஆண்டுள்ளனர். (பக். 401). இவர் காலத்தில் சாதாரண வழக்கத்திலிருந்த சில சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறியின் அவை பத்தொன்பதாம் நூற்றண்டில் வழக்கத்தில் இருந்தமை காணும்போது, எளிதில் உணர்ந்து கொள்ள வாய்ப்பாகும். (அகோசரம்—எட்டாதது; அங்கிஷம்—அன்னப்பறவை. அசனம்-உணவு; அடைசி-செறிந்து; அநுமானம்-உடன் கட்டையேறல்: அம் மருவாதியே—அப்படியே; அப்பிரதானம்—அற்பம்; அர்ச்சயம்-கட்டின்மை; இங்கிரேசி-ஆங்கிலேயர்; இதமித்தல்-இன்புறுத்தல்; உத்தாம்-பிறகு; எக்கச்சக்கம்-தாறுமாறு: