பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48

பலபல சம்ப (வீ)ப்புக்களினாலேயும் பாரபரிப்பில்லாததினாலேயு மெத்தவுந் தேவையாயிருக்கிற கோப்பி யுண்டாக்குதல்.

[1]

இவ்வாறு அது தொடர்ந்து செல்லுகின்றது. இதன் அமைப்பினையும் சொல் வழக்கினையும் பிற ஒலியியல்புகளையும் அந்நாட்டு அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். தமிழ்நாடு, இலங்கை என்ற மேற்கண்ட இரு நாடுகள் மட்டுமின்றித் தமிழ் வழங்கிய-தமிழ் மக்கள் வாழ்ந்த மலேயா, தென்னாப்பிரிக்கா, பர்மா முதலிய பல்வேறு இடங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழ் உரைநடை இந்த வகையில் வளர்ச்சி அடைந்தது என்பதை நன்கு காணலாம். அவற்றையெல்லாம் ஈண்டு நாம் தொகுத்து விளக்கப்பெறின், அவை எல்லையற்றுப் பெருகிக்கொண்டே செல்லுமாதலின், தொல்காப்பியர் காலந் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றண்டின் தலைவாசலில் கால்வைக்கும் வரையில் தமிழ் உரைநடை வளர்ந்த வரலாற்று ஆய்வினை இந்த அளவோடு நிறுத்தி அமைவோம். இனித் தமிழ் உரைநடை மிக அதிகமாக வளர்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என அறிவோம். அதற்குரிய காரணங்களையும் சூழல்களையும் ஆராய்வோம்.

நாட்டு நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்குமுன் ஒரு சில நூற்றாண்டுகளிலும் தமிழ் நாட்டு வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் உண்டாகியிருப்பதைக் காண்கிறோம். முசுலீம் ஆட்சியில் நாட்டுத் தலைமை 'தில்லி'யில் அமைய, அதன் அடிப்படையில், பலர், நாட்டின் பல்வேறு பாகங்களையும் அங்கங்கே இருந்துகொண்டு ஆண்டார்கள். மேலை நாட்டிலேயிருந்து போர்ச்சுக்கேசியரும் அவருக்குப்பின் டச்சுக்காரரும்


  1. Tami1 Culture, vol. XI, No. 2, PP. 173, 174.