பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவ்வாறு திருவரங்க அந்தணர்கள் ‘மெக்கன்ஸி’க்கு முன் விளக்கும் பொழுது சோழர் காலத்தை 36 யுகத்துக்கு முன்பு (சுமார் 60 லட்சம்x36) ஈர்த்துச் செல்லுகின்றனர். இதுபோன்ற விளக்கங்கள் பல அவர் குறிப்பில் உள்ளன. சில சாதிகள் பற்றிய கைபீதுகளும் உள்ளன. ஒன்று குறும்பர் பற்றியது. அவர் ஊர்கள் அனைத்தும் இன்றும் சென்னைக்குப் பக்கத்திலேயே உள்ளன.

குறும்பர்களுடைய ௨௪ கோட்டைகள் உண்டாயிருந்தன. அவைகளில் உப கோட்டைகள் அதிக விசேஷ கீர்த்திகளைப் பெற்றது. இந்த இருபத்தினாலுக்கும் புழல் கோட்டை ராஜதானி எனப்பட்டிருக்குது. இந்தக் குறும்பர்கள் பஞ்ச பாண்டவர்களின் யுத்தத்தில் அளனாகாளர் ஆக்கப்பட்டு படுகளத்தில் தீகமாய் தொண்டுபட்டதனால் யுத்தத்துக்கு அதிக பண்பட்டவர்களானார்கள் ஆனாலிவாளந்த யுத்தத்தில் முறியடிக்கப்பட்டு எங்கும் பரவி சிதறடிக்கப்பட்டார்கள்.

இவர்கள் கொல்லப்பட்டவிடம் நெடும்பூரில். அந்த இடம் இன்றும் குறும்பரைக் கொன்றவிடம் என்று சொல்லப்படுது. குறும்பருக்குண்டான கோட்டைகளின் விவரம் பொழில்–சாலப் பாக்கம்–நெடும்பூர் – அணைக்கட்டு – பட்டிபுலம் – ஆமூர் – புலியூர் – மறயிசீகுளம் – களத்தூர் – செம்பூர்–தமுணுார்–யீகார்டு.
(Mec. Collection D. 867)

வரலாற்றுக் கதைகள்

இவர் தொகுப்பில் மாணிக்க வாசகர் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பும் காணப்பெறுகின்றது. அதன் முகவுரையையும் முதலாவது பத்தியையும் மட்டும் ஈண்டுக் காணலாம்.