பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84

உள்ளனவேனும் இதுவும் தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெற்றுப் பின் நன்கு வளர இருக்கும் உரைநடைக்கு வழிகாட்டியாக அமையவில்லையா!

மக்கள் பிணக்கு

இனிச் சில மக்களின் வரலாறு பற்றிய குறிப்புக்களையும் கிராமங்கள் தோறும் மக்கள் சாதிவெறிகொண்டு மாறுபட்ட வரலாறுகளையும் இக்குறிப்புக்களில் காண்கின்றாேம். இத்துறையில் பல இவர் தொகுப்பில் உள்ளன. ஒன்றை மட்டும் காணலாம். இன்றும் சதுரங்கப்பட்டினத்தை அடுத்த நிலப்பகுதிக்குக் குறும்பரை நாடு என்றும் குறும்பர் நாடு என்றும் பெயர் இருப்பதை அறிவோம். ஆயினும் குறும்பர் என்ற மரபினர் வாழ்வைக் காணல் அரிது. இதற்கான காரணத்தை இன்றும் நம்மால் அறிய முடியவில்லை. பின்வரும் வரலாற்றுக் குறிப்பு- அதன் உரைநடையில் பல்வேறு தவறுகள் பெற்றிருந்தபோதிலும்-குறும்பர் வாழ்வு வீழ்ந்த வரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்று அமைந்துள்ளது.

குறும்பர் என்ற இடவமிஸத்தாருடைய

சரித்திரம்:


றாயர் சமஸ்தானத்திலே குறும்பர் என்ற யிடச் சாதிகள் வெகுஇடங்களிலே றாட்சியபாரம்பண்ணினார்கள். அவாள் நெடுமரம், அணைக்கட்டு, சால பாக்கம், நெரும்பூர், என்ற யிடங்களிலேயும் யின்னம் மத்த இடங்களிலேயும் கோட்டைகள் கட்டிக்கொண்டு பிரபலியமாய் வாழ்ந்தார்கள்=அன்னாள்களிலே குறும்பர் குடிமக்கள் முதலிக்குடிகளையும் வெள்ளாளகுடிகளையும் தங்களை வணங்கும்படியான பிறையத்தினம் பண்ணினார்கள் ஆனல் முதலிகளும் வெள்ளாளரும் அதுக்குச் சம்மதி கொடுக்கவில்லை அப்போ குறும்பர்கள் அவாளுக்கு வெகுயிடுக்கங்கள் பண்ணினார்கள் ஆனால