பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6)I I ILI தங்கத்தில் உயர்ந்ததென்பர் ஆட கப்பொன் ; தலைக்குடும்பக் கூட்டத்துள் மிகவு யர்ந்த அங்கமென்று பிரிந்திருக்கும் வதன வட்ட அணிமுகப்பே கனித்தோட்டப் பெண்மு கத்துத் திங்களுக்குள் செவ்வாயே! மலரு கின்ற திருவாயே! எதிரெதிரே காம வேள்கைச் செங்கரும்பு வில்லிரண்டைப் பொருத்தி வைத்துச் சேர்த்ததுபோல் இருக்கின்ற அமைப்பே ! உன்னைத் துணைப்பவளத் துண்டுகளின் புணர்ச்சி யென்பேன் ; துளைவிழுந்த தேனடைகீ என்பேன் ; மென்மை உணர்ச்சிகரம் புன்னிடத்தில் இருப்ப தாலே உன்னையும் நான் வீணைக்குத் தங்கை யென்பேன் : துணைக்கோவைக் கனியிரண்டு காத லித்துத் தூங்குகிற காட்சியென்பேன் அமுத ஊற்றின் அணைக்கதவே ! அடிக்கடிசென் றுடிக் கூடும் அதரங்கள் கடத்துகின்ற குடும்ப மென்பேன். 98 பனித்துளிகள்