பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் கரையில் எழுகின்ற காதலைத்தான் இளங்கோ முதலாக எல்லாரும் பாடுகின்ருர். ஏரியும் குளமும் எல்லாகீர்த் தேக்கமும், கற்பனைக் கெட்டாக் கடலென்னைப் பார்த்துப்பின் அற்பு மனிதன் அகழ்ந்த சிறுபள்ளம். என்னில் ஒருதுளி : கண்மாய் மதகிலே கள்ளனைப்போல் ஓடுகின்ற தண்ணீர்ப் பாம்பினங்கள். வேதனையில் பிறக்கின்ற வியர்வையோ அழுக்குநீர் : எங்கள் குலத்தின் இழிபிறவி, ஏழைகீர். தண்ணீர்க் குடமெடுத்துத் தேடிவரும் வஞ்சியரை வழுக்கி விழச்செய்து பாசத்தால் வஞ்சிக்கும் குளத்தைப்போல் என்னிடத்தில் குற்றம் எதுவுமில்லை. கடல் $33