பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலைப் பணித்துளி முட்டைகள், என்றன் கால்பட்டு உடைந்து கலைந்து சிதறின. சும்மாட் டுத்தலைக் கிராமத்துப் பெண்டிர் வாயை முன்ருனையால் மறைத்த வண்ணம் பாற்கூடை தூக்கி எதிரில் வந்தனர். கம்பங் கதிர்வால் அணிற்பிள்ளை போலக் கவலை ஏற்றம் கத்திக்கொண் டிருந்தது. மலையடி வாரத்தில் மாடுமேய்க் கின்ற சிலைபோல் அழகுச் சிறுமி யொருத்திஅப் பாடலைக் காற்றில் பரப்பிக்கொண் டிருந்தாள். காகித விணையைக் கையில் ஏந்திச் சிறுவன் ஒருவன் இன்னிசை கூட்டின்ை. திருச்செங் கோட்டில் வாழ்வோர்க் கெல்லாம் பரிச்சய மான பாடல் இப்பாடல். பாடிய கோதையை நினைத்தேன்; நினைவுகள் ஓடின, திரைப்படம் ஓடுவது போலே.