பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தேர் விழாவால் இவ்வூர் சிலகாள் விருந்துர் ஆகும் வேளாளப் பெண்டிர் கொத்து நகையுடன் கொண்டைப் பூவுடன் சத்தச் சிரிப்புடன் சாரி சாரியாய்ச் சிற்றுாரில் இருந்து முற்றுகை போடுவர். அடிக்கடி கேட்கும் முதலிமார் வீட்டுச் சடக்கொலித் தறித்தொழில் சிலநாள் தூங்கும், மேயும் சாமி மாடும், குவித்தமாங் காயும் ஈயும் எங்கும் தென்படும். மலைமேல் இருந்து மங்கை பங்கன் நகர்க்கெழுந் தருளும் நான்காம் திருவிழா மிகச்சிறப் பாக் கடந்துகொண் டிருந்த்து சிரிப்பு நெருப்பு வாண வேடிக்கை இருட்டில் பகலை எய்துகொண் டிருந்தது. ஆடு துறைக்குழல் மந்திரக் காரன் தோடி மேகத்தை ஊர்மேல் ஏவி நாதசுர மழையால் நனைத்துக்கொண் டிருந்தான். கண்ணனும் வீரா சாமியும், மலைமேல் இன்னும் இருந்தனர்; இறைவனைத் தொழுதனர். உச்சிப் பிள்ளைப்ார் கோவில் அடைந்த்னர் அச்சம யத்தில் மக்கள் கூட்டம் புற்றில் இருந்துகீழ் இறங்கும் எறும்புபோல் சுற்றம் சூழ இறங்கிகொண் டிருந்தது மலைமேல் மயான அமைதி சூழ்ந்தது. 18 பனித்துளிகள்