பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார் கோயிலுக் கருகில் இருக்கும் கல்லை ஊரார் வறடிகல்' என்பர். பிள்ளை இல்லா தவரும், தமக்கோர் கிள்ளையைத் தேடி மணக்கா தவரும் வறடி கல்லைச் சுற்றுவர், எண்ணம் விரைவில் முடியும் என்பத ளுலே. 'கண்ணு கமக்கோ கரும்புத் திருமணம் இன்னும் ஏளுே நடைபெற வில்லை. எதிரில் இருக்குமிக் கல்லைச் சுற்று வதளுல் கோதையர் மணப்பரோ நம்மை ?" என்று கேட்டான் வீரா சாமி கோதை என்னும் கொஞ்சும் சதங்கை காதில் விழுந்ததும் கண்ணன் எழுந்தான்; ஆவல் அவனை உந்த விரைந்து தாவினுன் வறடி கல்லின் பக்கம் ஒட்டில் காலை வைத்தான்; பின்னல் எட்டி உதைத்தான் வீரா சாமி. ஆழ்ந்த செங்குத்து அடிமுடிப் பள்ளத்தில் வீழ்ந்தான் கண்ணன் ; விழுகின்ற போது கோதை என்னும் கூப்பா டன்றி வேறெதும் அங்கு விழவில்லை காதிலே! கண்ணிர்த்தவம் 19