பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"கட்டிலில் எனது மார்பில்

கனிந்தவென் கனவே! பூமித் தொட்டில் எனைம றந்து
தூக்கமா ? கண்ணே! என்று நெட்டுயிர்ப் போட ணைப்பீர்!
நெருக்குவீர் ! என்னி டுப்பைத் தொட்டனைக் கின்ற அந்தத்
துடுக்குக்கை எங்கே காணோம்?

"அடிமுதல் முடிவ ரைக்கும்

அளக்கின்ற கண்க ளெங்கே? முடிமீதும் முகத்தின் மீதும்
மொய்க்கின்ற இதழ்கள் எங்கே? கொடிபோல கான் படுக்கும் -
கோபுரத் தோள்க ளெங்கே? வடிகின்ற செந்த மிழ்த்தேன்
வார்த்தைவாய் வீணை யெங்கே

"நெருங்கிய காதல் வாழ்க்கை

நிலையற்ற வான வில்போல் வெறுங்கன வான பின்னர்
வேறென்ன எனக்குத் தேவை? கருங்குழல் எரிந்த பின்னர்
கரியேது ? சாம்ப லேது ? வருங்காலம் என்ப தெல்லாம்
வாழ்வினில் இனிமேல் ஏது ?

26 பனித்துளிகள்