பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"குளிர்நிழல் கவிக்கும் பச்சைக்

கூடார மரமே! ஓடித்

தளிர்க்கரத் தால் மரத்தைத்

தழுவிடும் கொடியே என்றன் அழகனும் நானும் உம்போல்
ஆருயிர் தளிர்க்கக் கட்டித் தழுவினோம் என்ப தல்லால்
தவறென்ன செய்து விட்டோம்?

"குளிர்சுனை நடுவில் பூத்த

குமரியே! குவளைப் பூவில் இளைப்பாறு கின்ற வண்டே !
என்மலர் மார்பின் மீது களைப்பினால் உறங்கு வாரென்
காதலர் என்ப தல்லால் பிழைப்பென்ன செய்தார் இந்தப்
பெருந்துயர் அடைவ தற்கே?”

என்று கதறிய இளந்தளிர்க் கோதை நின்றாள்; விழுந்தாள்; நெருக்கும் வறுமையால் முன்பு புதைத்த முடிச்சுப் புதையலைப் பின்புவந் தாவலாய்ப் பறிப்பவர் போல, முன்றிலில் அமர்ந்து முல்லை தொடுத்துக் கன்றிய அல்லிக் கரங்களால், காதலன் படுத்துக் கிடக்கும் படுக்கையைக் கலைத்தாள்.

கண்ணீர்த்தவம் 27