பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கற்சிலைகள் எனக்கூறும் பேசா ஊமைக்

  கனவுகளைச் சிறைப்படுத்திச், சோழ மன்னர் 

கற்கோயில் பலவெடுத்தார்; அவைகள் எல்லாம்

  கருக்கொண்ட விருத்தவரிக் கம்ப காடன் 

சொற்கோயிற் கொப்பாமோ? அடிகள் தோறும்

  சுவைபழுத்த அக்கோயில், காலம் வென்று 

கிற்கின்ற கலைக்கோயில்: சோழர் கோயில்

  நிலையற்ற கோயிலென்று கங்கை சொன்னாள். 

நெடிலடி போல் தன் காலை மடித்து வைத்து

  கேரிழையாள் அவனருகில் அமர்ந்தாள்; சோழர் 

முடிமணியே! எனவழைத்தான். பிரித்தெ டுக்க

  முடியாத பார்வையினால் முடிந்து கொண்டார். கொடுமுடிவில் கூடுகட்டும் ஈக்கள் போலக்
  கோமகளும் பாட்டுக்கோன் மகனும், தங்கள் 

அடிமனத்தில் தேனடைகள் அடுக்க டுக்காய்

  ஆயிரங்கள் தித்திக்க நிரப்ப லானார்.

அலையலையாய் இறங்கிவரும் அருவிக் கூந்தல்

  ஆற்றினிலே குளித்தெழுந்தான் கவிஞன்; பாயும் கொலைவேற்கண் விழுப்புண்கள் தனது மார்பில் 
  கோடிபெற்றுப் பெருவீரன் ஆனான்; சோழன் 

கலைக்காப்பி யத்திற்குக் கம்பன் அம்பி

  காபதியோர் விருத்தியுரை இன்று செய்தான். 

கிலையுண்டா இழுக்கின்ற நீரில்? சொந்த

  கினைப்பின்றி இருவருமே மிதந்து சென்றார். 

______________________________ பனித்துளிகள் ______________________________