பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அந்தியிலே பவனிவரும் கிலவைப் போன்ற அழகரசி, பொற்சரிகைக் கூந்தற் காரி, செந்தூரப் பொடிகலந்த முத்து வெள்ளைச் சேற்றைப்போல் ஒளிவீசும் நிறத்தாள், பட்டுப் uங்தைப்போல் துள்ளுகின்ற உடலாள், பாதி பழுக்காத தக்காளிப் பழக்கன் னத்தில் முந்துகின்ற புன்னகையை ஓட விட்டு மூதறிஞன் தனைப்பார்த்தாள், தூண்டிற் கண்ணுல். 'நாடகத்தில் நீர்சிறந்த மேதை , மேலும் கல்லறிஞர் சொல்லழகர் அழகி கானே நாடகத்தில் புகழ்பெற்ற நடிகை , மண்ணில் நடமாடும் ஒளிமின்னல் ; கன்னல் : காதல் காடகத்தை காம்தொடங்கி மணந்தால் என்ன நடமாடும் நூலகமே ?’ என்று சொல்லி நாடகத்தில் பேசுகின்ற காதல் பேச்சை நல்லறிஞர் காதருகில் பேச லுற்ருள். தென்றலது வசந்தத்தை மணந்து கொண்டு, தேன்பாயும் சோலையிலே வாழ்ந்தாற் போலக் குன்றைப்போல் புகழுடையாய் காம் மணந்து குளிருக்குப் பகையாவோம் : கூடி வாழ்வோம் ! என்னழகும் உம்மறிவும் இணைந்து கூடி ஈடற்ற குழந்தைகளும் பிறக்கும் என்று கன்னத்தில் காவியங்கள் வடித்துக் காட்டும் கட்டழகி வீணையைப்போல பேச லாஞள். பனித்துளிகள்