பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்குமுத்து மாதுளையைப் பார சீகர் அணுர்என்று சொல்லுகிருர் , கண்ணே ! உன்றன் எடுப்பதற்குக் குறையாத முத்த வாயை என்னவென்று கூறட்டும் ? என்று கேட்டான். 'படுக்கைப்பூ முப்பத்தி ரண்டு முத்தைப் பதுக்கிவைத்த சிப்பியென்று சொல்லு மென்ருள். கடிக்காதே முத்தென்ருன் . இந்த முத்து கடிக்கின்ற கணுக்கரும்பு முத்தே ! என்ருள். "அக்பர்ஷா அரியணையில் மகுடஞ் சூட்டி அடுத்தேறும் சலிம்ஷாவே! கோட்டை மீது மொக்குமலர்க் கொடிபடர்வ துண்டா? தங்க முகப்பட்டம் மானுக்கும் உண்டா ? கொண்டி அக்கரையை நினைப்பதுவும், வான வில்லை ஆடையென்று கருதுவதும் தப்பா? என்மேல் சொக்கட்டான் ஆடுவதை நிறுத்தி விட்டுச் சொல்லுங்கள் சரியான விளக்கம்' என்ருள், 'அரங்கத்தில் ஆடுங்கால், இந்தத் தில்லி அரியணையில் கட்டாயம் ஆடும் ; இந்தச் சுரங்கச்சொல் எதற்காகப் பேசு கின்ருய்? சொல்லாடி கல்மண்ணுய்ப் பிசையும் அக்பர் இரும்புக்கை தடுத்தாலும், இராச புத்ர எரிநெருப்புத் தீக்காடு குறுக்கிட் டாலும் துரும்பெனக்கு மொகலரசின் தலையெ முத்துன் துணைக்காலில் ஆடுகிற தென்று சொன்னன். வேந்தன் அணைத்த விளக்கு 53