பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘எங்கிருந்து வருகின்ருய் திராட்சைக் கொத்தே ? எதிர்கின்று கண் பறிக்கும் பாண்டி முத்தே ! மங்கையர்க்கு மாதிரியாய் அமைந்த கூந்தல் மடமானே ! என்னிடத்தில் வேலை என்ன ? கொங்கலரே! கூறெ'ன்ருன் குடித்து விட்டுக் குழறுமொழி பேசுகின்ற பிரெஞ்சு மன்னன். "தங்கமுடி பறிபோன மன்ன! இந்தத் தையல்பேர் ஜோன் ஆப்.ஆர்க் என்ருள் மங்கை. பகைவீரர் புகுந்து விட்டார் நாட்டில் ! நீங்கள் படுத்துறங்கு கின்றீரே பழக்கொத் தோடு ! நகையாரோ உமைப்பார்த்துப் பிறகாட் டார்கள்? நாடாளும் மன்னருக்குப் போர்க்க ளங்தான் முகையாடும் மலராடும் அருவிச் சோலை : முன்ளுேடும் குதிரைதான் ஏறும் கட்டில் : பகையாடும் ஆட்டங்தான் ஆட்டம் , சாவில் பதைக்கின்ற கூக்குரல்தான் இனிக்கும் பாடல். "பஞ்சணைப்போர் இனிவேண்டாம் அரசே! பாயும் பகைப்போர்க்குப் புறப்படுவீர் ! என்று சொல்லிக் கெஞ்சிகின்ருள் ஜோன் ஆப்ஆர்க் , கிழங்கு மேனிக் கிள்ளையர்க்குத் தன்வாழ்க்கை உடைமை எல்லாம் தஞ்சமென்று தந்திருந்த அரும்பு மன்னன் தையல்சொல் கேட்டவுடன் திகைத்துப் போனன். அஞ்சிகின்றன் ; பேரிடியால் தாக்கப் பட்ட ஆல்ப்சுமலைச் சிகரம்போல் அதிர்ச்சி பெற்ருன். பனித்துளிகள்