பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மகளுக் கேயிந்த வீரம் ? கீயோ பெண்ணல்லை ! பேய்மகளே குட்டிச் சாத்தான் கண்ணுக்கு முன்னிற்க வேண்டாம் ; சூன்யக் காரிக்கு நெருப்புத்தான் கடைசி முத்தம் ! திண்ணமிது போ! போ! போ!' என்று சொல்லித் திருவடியார் கூட்டத்தார் நீதி தந்தார். எண்ணத்தில் படிந்திருந்த இருட்டு, தாடி இருட்டாக அவர்முகத்தில் வழிந்த தென்பேன். பனிமலரை அங்கிருந்து பறித்துச் சென்ருர் பாவாடைப் பாதிரிமார் எழுந்து சென்ருர் குனியாமல் கொழுந்துவிட்டு நிற்கும் தீயில் குளிர்நிலவைக் குளிக்கவைத்தார் : பழுத்த கொவ்வைக் கனியிதழைக் கண்ணுடிக் கன்னங் தன்னைக் கணுவிருக்கும் செங்கரும்பு மேனி தன்னைப் பனிமுல்லைக் கொடியாளும், காதலன் போல் பற்றிகின்ற செந்தீக்கு விருந்து வைத்தாள், பனித்துளிகள்