பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மான்கள் மருத்துவ மனைக்குச் சென்று மதிமுகச் செவிலிப் பெண்டிர் கருத்துடன் தொண்டு செய்யும் காட்சியை ஓர்ாாள் கண்டேன் அரிவையர் அவர்கள் அல்லர் , அழகிய அன்னக் கூட்டம் ! பரிவுடன் படுக்கை தோறும் பழகிடும் பால் கிலாக்கள் ! படுக்கையை விரிப்பர் ; கொல்லிப் பலாச்சுளை வாய் திறந்தே அடிக்கொரு தரம் சிரிப்பர் ; அழகிய மயில்போல் ஆடித் துடிப்புடன் நடப்பர் மான்போல் துள்ளுவர் உள்ளத் தன்பை வடித்தெடுத்து எதிரில் வைப்பர் , வட்டிலைச் சுமந்து செல்வர். 72 பனித்துளிகள்