பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மொன்றில், களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் என்பவன் 'பூழி நாட்டைப் படையெடுத்துத் தழி இ’ என்று புகழப்படுவதால், அவன் காலமுதல் ‘பூழியன்’ என்னும் பெயர் சோற்கு வழங்கியதாகக் கருதலாம். இப்பெயர் வழக்கம், முத்தொள்ளாயிரமுடையா திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் சேரற்கு வழங்கியதென்பது, t 'பூழியர் கோக்கோதை’’ எனவும், "பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர் மன்னர்' எனவும் வரும் அவ்விருவர் வாக்காலு ந் தெரிகின்றது. பிற்பட்ட நிகண்டுகளிலும் நூல்களிலுந்தான் இப்பெயர் பாண்டியர்க்கு வழங்கத் தொடங்குகிறது. இவை போன்ற சங்க காலத்து வழங்கிய செய்திகள் பல திவாகரத்தில் அறியக் கிடத்தலால், சரித்திர வாராய்ச்சிக்கு இது பெரிதும் உபயோகமான தென்னலாம். உ. பிங்கலம் இனி, அடுத்த பிங்கலத்தைப் பற்றிச் சிறிது ஆராயப்படும். இந்நிகண்டின் பாயிரத்தே இதசிைரியராகிய பிங்கல முனிவர் திவாகரர் புத்திரர் என்று கூறப்படினும், நூற்கணுள்ள சில வழக்குகளை நோக்கும் போது, இது திவாகரத்திற்கு மிகவும் பிந்தியதாகவே எண்ணப்படுகிறது உதாரன மாக-பல்லவர் என்னும் பெயர் இழிஞர்க்கு இதில் காணப்படுகிறது. இதல்ை, பல்லவ அரசர்தம் நிலைகுலைந்து இழிவுற்ற காலததே பிங்கலந்தை செய்யப்பட்டது போலும் என்று கருத இடமுண்டாம். திவாகரத்தில் இச் சொல் வழக்கமே கண்டதில்லை இவ்வாறே பிற்கால வழக்குகளை அங்கங்கே இதிற் காணலாம் ஆயினும் இற்றைக்கு 725-வருவடிங்கட்கு முந்தியதென்று தெளியப் பட்ட நன் னுாலுக்கு முற்பட்டதென்பது பிங்கல முதலா நல்லோருரிக சொல்' என்பதற்ை றெளிவாம். திவாகரத்திற் கண்ட சாளுக்கியர் முதலிய வழக்கு பிங்கலந்தையிற் காணப்படினும், அவை முந்நூலி கனின்று தழுவப்பட்டவை எனக் கொள்ளலே பொருத்தம். இதுநிற்க, 'குடம்பை தனித் தொழியப் புட்பறந் தற்றே, உடம் போடுயிரிடை நட்பு' என்னுந் திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய உரையில் ", ம்பை - முட்டை என்றெழுதப்பட்டதை, அவ்வாறு முன் னுரல்களிற் ய, வள் வழக்கில்லை என்று மறுத் தாருமுளர். ' குடம்பை முட்டையுங் க. பெ. கும்’ என்பது பிங்கலந்தைச் சூத்திரமாதலால், பரிமேலழ கா, முழுதும் ஆதரவற்றதென்பது பொருந்தாமை காண்க. இச் சூத்திரம் எட்டுப் பிரதியிலுங் கண்டது. (புத் தொள்ளாயிரச் செய்யுட்கள் - 6, 7. (செந்தமிழ்த் f தொகுதி - 4) பெரிய திருமொழி 7, 7, 4.