பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் f{35

கருவி தெய்வத்தன்மை வாய்ந்த தென்பனை அணங் கமர் யாழ்முரித்து’ என் புழி, அணங்கமர் யாழ்' என் னும் அடைமொழியினல் நம்பியாண்டார் நம்பி தெளி வாகப் புலப்படுத்தின மை காணலாம். திருநீலகண் டப்பெரும்பானர் கையிலுள்ள யாழினே முரிக்க வேண்டுமென்பது திருஞானசம்பந்தப் பிள்ளேயார் கருத்தன்று என்பது, யாழினே உடைக்க ஓங்கிய பெரும்பாண ரைப் பிள்ளையார் தடுத்துப் பாதுகாத்த செயலால் இனிதுன ரப்படும்.

யாழிலடங்காதவாறு திருஞானசம்பந்தர் பாடிய *மாதர் மடப்பிடி யென்ற திருப்பதிகம் யாழ்முரி’ யென்ற பெயரால் தொன்றுதொட்டு வழங்கப்பெற்று வருகின்றது. இப்பெயர் யாழை முரித்ததகுல் எய்திய தென்பர் சிலர். அன்னேர் கருதுமாறு யாழைமுரித்த செயல் பிள்ளையார் வரலாற்றில் இடம்பெறவேயில்லே. முரி யென்பது ஒரடியில் தொடங்கிய யாப்பியலேயும் இசை நடையையும் அவ்வடியிலேயே முரித்து மாற்றி மற்ருெரு யாப்பியலும் இசை நடையும் அமையப் பாடப்பெறுவதாகிய இசைப்பாட்டாகும். இதனே முரிவரியென்றுங் கூறுவதுண்டு. இதன் இலக்கண த் தினே,

"எடுத்த இயலும் இசையுந் தம்மின்

மூரித்துப் பாடுதல் முரியெனப்படுமே”

எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் காட்டிய மேற்கோட் சூத்திரத்தால் நன்குணரலாம். இங்ங்னம் விரைவில் முரிந்துமாறும் இயலிசை நடையமைந்த வரிப்பாடலே யாழ் முதலிய இசைக்கருவிகளில் வாசித் துக் காட்டுதல் இயலாதா கலின் முரியாகிய இவ் விசைப்பாடலை யாழ்முரி என்ற பெயரால் வழங்குதலு

முண்டு. இவ்வழக்கம்,