பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #5

புத்தர்கள் வாதிற் பொருமிடத்து அறிவோம்' என அமைதியாகக் கூறினர். அந் நிலேயில் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களாகிய திருமுறையினே ஏட்டில் எழுதும் பெருமையுடைய அடியார் ஒருவர், பிள்ளே யாரது திருவாக் காகிய,

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின. வித்தக நீறணிவார் வினேப்பகைக் கத்திர மாவன அஞ்செழுத்துமே.

என்ற திருப்பாட்டினே யோதி, இடியிடித்து விழுதலாற் புத்தன் தலே உருண்டு வீழ்க என வெகுண்டுரைத்த னர். அன்பர் கூறிய மந்திரமாகிய அத்திர வாக்கினுல் இடி விழவே புத்தநந்தியின் தலே உடலினின்றும் அறுபட்டு வீழ்ந்தது. அதனேக் கண்டு திடுக்கிட்டு அஞ்சிய புத்தர்கள் சிதறுண்டு ஓ டி ைர் க ள். அஃதுணர்ந்த ஞானசம்பந்தர், அடியார்களே நோக்கி ‘அரன் நாமமே ஒதுமின்’ எனப் பணித்தருளினர். அரகர முழக்கங் கேட்ட புத்தர்கள், மீண்டுங் கூட்ட மாகக் கூடிச் சாரிபுத்தன் என்பவனே அழைத்து வந்து பிள்ளையாரை அணுகி மந்திர வாதமின்றித் தர்க்க வாதமே செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட னர். பிள்ளே யாரும் அதற்கிசைந்தருளினர். சத்திர மண்டபத்தில் சிவனடியார்களும் புத்தர்களும் ஒருங்கு குழுமியிருந்தார்கள். புத்தநந்தியின் சிரத்தின் மேல் இடி விழும்படி திருமுறை யோதிய அன்பரும் சாரி புத்தனும் ஆகிய இருவரும் நிகழ்த்திய வாதத்தில் சாரிபுத்தன் தோல்வியுற்றன். அதுகண்டு அங்குள்ள புத் தரனே வரும் தங்கள் கொள்கை தவறென வுணர்ந்து திருஞானசம்பந்தருடைய திருவடிகளே வணங்கிச் சைவரானர்கள் இங்ங்னம் ஞானசம்பந்தர் தம் அடி யார்களேக்கொண்டு புத் தரை வாதில் வென்றருளிய செய்தியை ஆசிரியர் சேக்கிழார் பெரிய புராணத்தில் விரித்துரைத்துள்ளார். ஆளுடைய பிள்ளையாரது