பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

பன்னிரு திருமுறை வரலாறு


ஏடானது நதியின் மீது எதிரேறிச் செல்லுதற்கு அருளிய இறைவனே என இத்திருப்பதிகத்திருக்கடைக் காப்பில் பி மபுரத்திறைவனே ப் போற்றி மகிழ்ந்தார். பின்பு தம்மைப் பிரியாது உடன் வரும் பெருங் கேண்மையினராகிய திருநீலகண்ட யாழ்ப்பான ரை விறலியாருடன் அவரது மாளிகையிற் செல்லப் பணித்துத் தம்மைப் பெற்றெடுத்த தாயார் மகிழ்ந் தெதிர்கொள்ளத் தமது திருமாளிகையில் சென்றமர்ந் தாா.

தொண்டை நாட்டுக்கு எழுந்தருளுதல்

திருவேகம்பப் பெருமானே வணங்க விரும்பிய ஞானசம்பந்தர், தம் தந்தையாரை நோக்கி அப்பர், நீர் அருமறை முறைப்படி வேள்வி செய்து இங்கு அமர்ந்திருப்பீராக’ எனக் கூறி, அடியார் குழாத் தொடும் சீகாழிப்பதியிலிருந்து புறப்பட்டுத் தில்லைக் கூத்தப்பெருமானேப் பணிந்து, தினே நகர், மாணி குழி, பாதிரிப்புலியூர், வடுகூர், வக்கரை, இரும்பை மாகாளம் முதலிய தலங்களே யிறைஞ்சித் திருவதிகை வீரட் டான த்தை யடைந்தார். அப்பொழுது வீரட்டானத் திறைவர், பூதம் பாட நின்ருடும் தமது ஆடற் கோலத்தினேப் பிள்ளேயார்க்குக் காட்டியருளினர். அத்தெய்வக் காட்சியைக் கண்டு உளமுருகிய ஞான சம்பந்தர்,

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்

கெண்டைப் பிறழ்தெண்ணிர்க் கெடில வடபக்கம்

வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை

விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே. என்ற திருப்பதிகத்தைப் பாடிப்போற்றினர். பின்னர் ஆமாத்துளர், கோவலூர் வீரட்டம், அறையணி நல்லூர் ஆகிய தலங்களே யிறைஞ்சி அண்ணும லயிது வென்று அன்பர்கள் காட்டக் கண் டார். திருவண்ணுமலே அழல் வண்ணணுகிய சிவபெருமானது வடிவு போன்று தோன்றிய தோற்றத்தைக் கண் ணுற்