பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

பன்னிரு திருமுறை வரலாறு


பந்தப் பிள்ளையார்க்குப் பதினறுவயது நடைபெற்ற தென்பது இப்பாடலால் இனிது புலகுதல் கான லாம்.

திருக்கடாலிச்சரப்பெருமானப் பணிந்து போற் றிய ஞானசம்பந்தப் பிள்ளையார், சிவநேசர் முதலி யோர்க்கு விடையருளித் திருவான்மியூரடைந்து இறை வனப் போற்றிச் சில நாள் அங்கமர்ந்திருந்தார். பின்பு இடைச்சுரம், திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக் கம் அரசிலி, புறவார் பனங்காட்டூர் முதலிய பதி களேப் பரவிப் போற்றித் தேவர் பிரான் நடம் பயிலுந் திருத்தில்லை நகரடைந்தார். தில்லைவாழந்தணர்கள் எதிர்கொண்டு போற்றத் தில்லைச் சிற்றம்பலவனே யிறைஞ்சிப் போற்றி எல்லேயிலா இன்புற்றர். பின் தில்லைக்கூத்தன்பால் விடைபெற்றுப் பல தலங்களே வணங்கி வருபவர், சேய்மையிலே சீகாழிப்பதி தோன்றுவது கண்டு சிவிகையை விட்டு இறங்கி ‘வண்டார் குழ லரிவையொடும் என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டு அப்பதியின் எல்லேயை யடைந்தார். நறுமலர் கொண்டு அருச்சித்து அந்நகரைத் தொழுது நம்பன் மேவும் நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே எனப்பாடிப் பரவிப் பிரம புரத்துட் புகுந்தார். தோணி புரத் திருக்கோயிலே வலங்கொண்டு கோயிலுள்ளே புகுந்து பெரிய பெருமாட்டியுடன் வீற்றிருக்கும் பெரு மானைப் பணிந்து போற்றித் தமது திருமாளிகையினில் அமர்ந்திருந்தார்.

திருமணம்

இங்ங்னம் இருக்கும் நாளிலே திருஞானசம்பந் தரை வணங்கும் விருப்புடன் முருக நாயனர் , நீலநக்க நாயனர் முதலிய திருத்தொண்டர்கள் சுற்றத்தாருடன் சீகாழிப் பதிக்கு வந்து சேர்ந்தார்கள். இந்நிலையில் சிவபாதவிருதயரும் சுற்றத்தார்களும் ஒருங்கு கூடித் திருஞானசம்பந்தர் திருமணஞ் செய்துகொள்ளுதற்