பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் $65

குரிய பருவமும் இதுவே யென்று எண்ணிப் பிள்ளே யாரை அணுகி, மறை முறைப்படி வேள்வி பவி செய்தற்கு ஒரு கன்னியை மனம் புரிந்தருள வேண் டும் என வேண்டிக் கொண்டார்கள். அதுகேட்ட பிள்ளேயார், சுற்றத் தொடர்ச்சியினே விட்டு நீங்கும் நினேவின ராய் அது கூடாது' என மறுத்தருளிஞர். மறையவர்கள் மீண்டும் பிள்ளே யாரைக் கைதொழுது பேருந்தகையீர், வேதநெறியை மீண்டும் இவ்வுலகில் நிலேபெறச்செய்த பெருமை தங்களுக்கு உரியதே. ஆதலால் அவ்வேத விதிப்படி அந்தணர்க்குரிய அறு தொழில் இயற்றத் திருமணம் செய்யத் தாங்கள் திரு வுளங் கொண்டருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண் டார்கள். ஞானசம்பந்தர் இறைவனது திரு வருளே நினேந்து, மறைவாழவும் அந்தணர் தம் வாய்மை யொழுக்கம் பெருகுந் துறைவாழவும் திரு மணத்திற்கு உடன் பட்டருளினர். அது கண்டு உவகைமிக்க சிவபாதவிருதயர், தம்மோடு ஒத்த குலத் தவராய்த் திருநல்லூரில் வாழும் தம்பாண்டார் நம்பி யின் திருமகளே ஞான சம்பந்தர்க்கு ஏற்புடைய வாழ்க்கைத் துனேயெனக் கருதி ஒர். நல்லூரில் அவர் பால் மகட்பேசச் சென் ருர், நம்பாண்டார் நம் பியும் சிவபாத விருதயரை உவகையுடன் எதிர் கொண்டு போற்றித் தம் மகளே ஆளுடைய பிள்ளே யார்க்குத் திருமணஞ் செய்து தருவதாக உடன் பட் டுரைத்தார். சிவபாதவிருதயர் சீகாழிக்கு வந்து திருமண நாளே உறுதி செய்துகொண்டு நம்பாண்டார் நம்பிக்கு அறிவித்தார். அவரும் ஏழு நாட்களுக்கு முன் திருமண வினேயைத் தொடங்கி முளைப்பாலிகை அமைத்துத் திருநல்லூரில் திருமணப் பொலிவு எங் கணும் விளங்க மங்கல அணி செய்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளேயார், தோணிமீது பெரிய தாச்சியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானே இறைஞ்சி