பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் கந்தபுராண அவையடக்கச் செய்யுளிலும் முறையென்ற சொல் நூலென்ற பொருளில் வழங்கக் காண்கின் ருேம். முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்” என வரும் பழஞ்சூத்திரத்திலும் முறை யென்பது நூலென்ற பொருளில் வழங்கியதாகவே கொள்ளலாம்.

மக்கள் அறியவேண்டிய பொருள்களே அறிவுறுத்தி மனக்கோண லேத் தீர்த்துத் தீமையினே விலக்கி நன்றின்பாற் செலுத்தும் மாண்புடைய சொற்களால் முறைப்பட இயற்றப்பெற்றனவே நூலெனச் சிறப் பித்துப் போற்றப்படுவன. மக்களே விலங்கினின்றும் வேறுபிரித்து நன்றுந் தீதும் பகுத்துணரும் மனவுணர் வுடைய ராக்கி மேம்படுத்துவன அறிவு விளக்கந்தரும் நூல்களாதலின், அந் நூல்களே இலங்கு நூல்’ எனச் சிறப்பித்தார் திருவள்ளுவர். உலக நூல், அறிவனுால் என நூல்களே இருவகையாகப் பகுத்துரைப்பர் பேரா சிரியர். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நில மும் பொழுதுமாகிய முதற்பொருளேக் குறித்தும் அம் முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோன்றும் தாவரம், விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களைக் குறித்தும் இப்பொருள்களின் இயல்பினை நன்குணர்ந்து பயன்கொள்ளுதற்கேற்ற மனவுணர்வுபெற்ற மக்கட் குலத்தார் பிறவுயிர்க்குத் தீங்கின்றி இவ்வுலக நலங் களே நுகர்ந்து இன்புறும் ஒழுகலாருகிய உரிப்பொரு இளக் குறித்தும் விளங்கக் கூறுவன உலக நூல்களாகும். இந்நூல்களே இயற்றுதற்குரியோர் வையத்து வாழ் வாங்கு வாழ்ந்து இவ்வுலகப் பொருளின் நலந் தீங்குகளே உள்ளவாறு நுனித்துணரும் பேரறிஞராவர். இத்தகைய சான்றேர்களால் இயற்றப்படும் உலக நூல்கள் மக்களது வாழ்க்கை முறையினே மேன்மேல்

1. விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல்

கற்ருரோ டேனே யவர்' (திருக்குறள்-410)

2. திருக்கோவையார் பேராசிரியர் உரை

(முதற்செய்யுள்)