பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

பன்னிரு திருமுறை வரலாறு


ழாது திருநாவுக்கரசர் அமுது செய்தருளக் காலந் தாழ்ந்ததே எனச் சிந்தை நொந்தார்கள். அப்பர் பெருமான் அவர்களது மனக்கருத்தறிந்து அமுது செய்தருள மனே க்கண் எழுந்தருளினர். அதுகண்டு மகிழ்ந்த அப்பூதியடிகளார். திருநாவுக்கர சர்க்குத் திருந்திய வாச நன் னிர் தந்து திருவமுது செய்த ருளும் படி வேண்டி ர்ை. அப்பொழுது அப்பரடிகள் அவரை நோக்கிப் புதல்வர்களும் நீரும் இங்கு என்னுடன் அமுதுசெய்வீராக’ எனப் பணித்தருளினுர். அவ்வண் ணமே அப்பூதியடிகளும் அவருடைய புதல்வர்களும் தம் இருமருங்கிலும் அமர்ந்து அமுதுசெய்யத் திருநா வுக்கரசர் அவர்களுடன் திருவமுது செய்தருளினர்.

அப்பூதியடிகளார் உபசரிக்கத் திங்களுரிற் சில தாளமர்ந்திருந்த திருநாவுக்கரசர், அப்பூதியடிகளுடன் திருப்பழனப்பெருமானே வழிபடச் சென்று சொன் மாலே பயில்கின்ற குயிலினங்காள் சொல்லிரே எனத் தொடங்கும் பாமா லே பாடிப் போற்றினர். அத்திருப் பதிகத்திலே,

வஞ்சித்தென் வளே கவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே.

என வரும் திருப்பாடலில் அப்பூதியடிகளாரது ஒழுக் கத்தின் விழுப்பத்தினையும் சிவனடித் தொண்டினையும் சிறப்பித்தருளினர் என்னே வஞ்சித்து யான் தன் பிரிவினுல் வருந்தி இளேத்த நிலேயில் என் கைவளே களைக் கவர்ந்து சென்ற ஆருயிர்த் தலைவனுகிய சிவ பெருமான், என் உள்ளம் மகிழ என்பால் எழுந்தருளி வாராகுயினும், பஞ்சினையொத்து மெத்தென்ற கால் களேயும் சிறகினேயுமுடைய அன்னங்கள் பரவி ஆர வாரிக்கும் வளமார்ந்த திருப்பழன மென்னும் பெயர்.