பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

பன்னிரு திருமுறை வரலாறு


திருவிழிமிழலையை அடைந்தார்கள். விழிமிழலையி லுள்ள பெருமக்கள் எதிர்கொண்டு போற்ற விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமான வணங்கி மகிழ்ந்தார்கள். செய்யசடையார் தமைச்சேரார் தீங்குநெறி சேர்கின் ருர்’ என்னும் கருத்தமையக் திருவிழிமிழலையானச் சேரா தார் தீநெறிக்கே 盤5ー# கின் ருரே" என முடியும் உய்யுநெறித்தாண்டகத்தினத் திருநாவுக்க ரசர் பாடிப்போற்றினர். அரசரும் பிள்ளே யாரும் அடியர் கூட்டத்துடன் இருவேறு திருமடங் களில் அமர்ந்திருந்து விழிமிழலைப்பெருமானேக் காலந் தோறும் வழிபட்டு மகிழ்ந்தார்கள்,

படிக்காசு பெறுதல்

அந்நாளில் மழையின்மையாலும் காவிரியில் நீர்ப் பெருக்கில்லாமையாலும் பஞ்சமுண்டாயிற்று. மக்க ளெல்லாம் பசியால் வருத்தமுற்றனர். அந் நிலையில் விழிமிழலைப் பெருமான் திருநாவுக்கரசர்க்கும் திருஞான சம்பந்தர்க்கும் கனவில் தோன்றி. "நீங்கள் காலவேறு பாட்டினல் மனத்தில் வாட்டமடையமாட்டீர்கள், எனினும் உங்களைச் சார்ந்து வழிபடும் இயல்புடைய தொண்டர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு நாம் உங்களுக்குப் படிக்காக தருகின்ருேம்’ என்று கூறி விண்ணிழி விமானத்தின் மேற்குப் பீடத்திலும் கிழக் குப் பீடத்திலும் அவ்விருவர்க்கும் நாள்தோறும் படிக் காசு ைவ த் த ரு ளி ைர். அப்பெருமக்களிருவரும் இறைவனளித்த படிக்காசினேக் கொண்டு பண்டங்கள் வாங்கித் திருவமுது சமைப்பித்துச் சிவனடியார்க ளெல்லாம் எய்தியுண்க’ என இரண்டு பொழுதும் பறைசாற்றி அடியார்களே அமுது செய்வித்துப் பசித் துன்பத்தை மாற்றியருளினர்கள்.

திருநாவுக்கரசர் சிவபெருமானுக்குக் கைத்திருத் தொண்டு புரியும் அடியவராதலால் அவர் பெறும் காசி