பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 257

சிவனருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியா ரூரர் என்ற திருப்பெயரிட்டு அழைத்தார்கள். நம்பியா ரூரர் நடை கற்கத் தொடங்கித் தெருவிலே சிறுதேர் உருட்டி விளேயாடுங் காலத்து அந்நாட்டிலே வாழும் நரசிங்கமுனேயர் என்னும் அரசர் அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினை கண்டு மகிழ்ந்து பெற்ருே ராகிய சடையனரை அடைந்து நெருங்கிய நண்பின் மிகுதியாலே அக் குழந்தையை வேண்டிப்பெற்றுத் தம் அரசபதவிக்குரிய அரசிளங் குமரன் என்ற முறையில் அன்பினுல் வளர்த்து வந்தார்.

சுந்தரமூர்த்திசுவாமிகள் தாம் பாடிய திருப்பதிகங் களில் திருநாவலூரன், மறைய ர் தங்குரிசில், சடை யன்றன் காதலன், இசைஞ ணி சிறுவன், எனத் தம்மைக் குறிப்பிடுதலால், இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் ஆதிசைவ வேதியராகிய சடையனர்க்கு அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் இசைஞானியார் திருவயிற்றில் மகவாகத் தோன்றியவ ரென்பது நன்கு விளங்கும். இவர் தம்மைப் பல இடங் களிலும் ஆரூரன்' என்ற பெயராற் கூறிக் கொள்ளுதலே ஊன்றி நோக்குங்கால் இவர்க்குப் பெற்ருேர் இட் டழைத்த பெயர் ஆரூரன் என்பது இனிது புலனும். ஆரூரன் என்னும் இப்பெயர், திருவாரூரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமானுக்குரிய திருப்பெய

சுந்தரர் தேவாரம் 7-8-10.

!.

2. 92 7-25-10. 3. 33 7–58–10. 4. > * 7-i 3 - ? ).

1. சுந்தரர் தேவாரம் 7-4-10, 7-2-11, 7-8-10 முத லிய திருக்கடைக்காப்புப் பாடல்கள் பலவற்றிலும் ஆரூரன் என்ற பெயர் குறிப்பிடப் பெற்றுளது. நாவலூரன், ஆரூர.இ என்ற இருபெயர்களுக்கும் உரிய வகையில் ஊரன்’ என்ற பெயரமைந்த பாடல்களும் உள்ளன.