பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரல: ஜ: 275

எம்மானே யெறிகெடில வட வீரட் டச ைத்

துறைவானே யிறைபோதும் இகழ்வன் போ வியானே என வரும் திருப்பதிகத்தைப் படித் துதித்தார். எம் தலேவனுகிய சிவபெருமான் எப்பொழுதாவது தன் திருவடிகளே என் முடிமேற் சூட்டி யருள் புரிவான்’ என்னும் ஆசையால் வாழ்கின்ற நாயேன், அப் பெருமானே எளிவந்து என் சென்னியில் திருவடி சூட்டியருளிய இந் நிலேயில் அவனே யறியாது இறுமாந்து இகழ்ந்தேனே' என இத் திருப்பதிகத்தின் முதற் பாடலில் நம்பியாரூரர் கவன்றுரைத் தமை காணலாம். திருவதிகை வீரட்டான த் திறைவர் திருவடி சூட்டி மறைந்த நிலையில் வன் ருெண்டர் இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினு ரென்பது இதல்ை நன்கு புலனும்

தில்லைச் சிற்றம்பலவனை வணங்குதல் திருவதிகையிறைவரால் திருவடி சூட்டப்பெற்ற நம்பியாரூரர், இறைவனது திருவடிகளை நினைந்து உவகை மீது ர்ந்த உளளத்தினராய் திருக்கெடில நதி யில்மூழ்கிச் சிவபெருமானே வழிபட்டு அந்நதியின் தென்கரையை யடைந்தார். திருமாணிகுழி, திருத் தினே நகர் ஆகிய தலங்களே வழிபட்டுத் தேவர் பிரான் திரு நடம்புரியும் தில்லே நகரத்தின் எ ல் லே ைய அணுகினர். அந்நகரத்தின் புறத்தே யமைந்த தண்ணிழல் தரும் சோலேகளேயும் நறுமணம் மிகுந்த நந்தவனங்களேயும் மதிலைச் சூழ்ந்து விளங்கும் கிடங்கு களேயும் கடந்து, வடதிசை வாயில் வழியாகத் தில்லே நகரத்தினுள்ளே புகுந்து, சிவனடியார்கள் எதிர் கொண்டு போற்ற அழகிய திருவீதியினே வணங்கி வலம் வந்தார். பெரும தில் சூழ்ந்த செம்பொன் மாளிகையின் நடுவே மேருமலை போன்று ஒளியுடன் விளங்கும் பேரம்பலத்தை வலஞ்செய்து வணங்கினர். அருமறையாகிய வேதத்தின் முதலிலும் நடுவிலும் முடிவிலும் மெய்யன்பர்களுடைய திருவுள்ளத்திலும்