பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பன்னிரு திருமுறை வரலாறு


ஒன்ருகும். அது சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் பாடுதற்கு ஆதாரமாகக் கொண்ட நூல்களுள் ஒன்று. அவ்வுண்மையை,

அந்தமெய்ப்பதி கத்தடியார்களே நந்தம் நாதனும் நம்பியாண்டார் நம்பி புந்தியாரப் புகன்ற வகையில்ை வந்தவாறு வழாமல் இயம்புவாம்.

என்னும் அவ்வடிகளது திருவாக்கிளுல் நன்கறியலாம். எனவே திருத்தொண்டர் வரலாற்றை மிகச் சுருக்க மாகக் கூறும் வகைநூலாகிய திருத்தொண்டர் திரு வந்தாதி, நம்பியாண்டார் நம்பியினால் இயற்றப் பெற்றது என்பதிற் சிறிதும் ஐயமில்லே. அந்நூல் தொகையடியார் ஒன்பதின்மர்,தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எழுபத்திரண்டு சிவனடியார் வரலாற் றையும் எண்பத்தொன்பது இனிய பாடல்களிற் கூறு கின்றது. தனியடியார்களே அறுபத்துமூவர் என்று கணக்கிட்டு முதலில் உணர்த்தியவர் நம்பியாண்டார் நம்பியேயாவர்.

இப்பெரியார், தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் புகழ்ச் சோழர், இடங்கழியார், கோச் செங்கட் சோழர் ஆகிய அடியார்களேப்பற்றிய பாடல் களில் தம்காலத்துச் சோழமன்னன் ஒருவனேக் குறிப் பிட்டுள்ளார். தம்மை அன்புடன் ஆதரித்துப் போற்றி வந்த அரசர், வள்ளல் முதலானுேரின் பெயர்கள் என்றும் நின்று நிலவுமாறு அவர்களேத் தம் நூல்களிற் புகழ்ந்து போற்றுதல், நம் தமிழ் நாட்டில் முற்காலத் தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் வழக்கம் என்பது தொன்னூலாராய்ச்சி யுடையார் யாவரும் அறிந்த தொன்ரும். அத்தகைய செயல், புலவர்களின் நன்றி மறவாமையாகிய அருங்குணத்தை உணர்த்தும் எனலாம்.