பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

பன்னிரு திருமுறை வரலாறு


நாட்டிலுள்ள மாதோட்டக்கேதீச்சரத்தை எண்ணி வழிபட்டுத் திருப்பதிகம் பாடினர். பின் அங்கிருந்து புறப்பட்டுத் திருச்சுழியல் என்ற தலத்தையடைந்து ஊனயுயிர் என்னும் திருப்பதிகம்பாடி இறைவனே வழிபட்டு அப்பதியில் தங்கியிருந்தார். அப்பொழுது சிவபெருமான், தம் திருக்கையிலே பொற்செண்டும் திருமுடியிற் சுழியமும் உடையவராகி நம்பியாரூரர்க் குக் கனவிலே தோன்றி, யாம் இருப்பது கானப் பேர் என்று கூறி மறைந்தருளினர். ங்குமிலாத் திரு வேடத்தைக் கண்டு விழித்தெழுந்த சுந்தரர், தாம் கண்ட கனவுக்காட்சியைச் சேரமான் பெருமாளுக்குத் தெரிவித்துத் திருச்சுழியலிலிருந்து புறப்பட்டு,

தொண்டரடித் தொழலுஞ் சோதியிளம் பிறையுஞ்

சூதன மென் முலேயாள் பாகமு மாகிவரும் புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்தமருங் கொண்டலெனத் திகழுங் கண்டமு. மெண்தோளுங்

கோல நறுஞ்சடைமேல் வண்ண முங் கண்குளிரக் கண்டுதொழப் பெறுவ தென்று கொலோ வடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளே யையே.

என்ற திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு திருக்கானப் பேர்க்குச் சென்று இறைவரை வழிபட்டு அங்குச் சில நாள் தங்கியிருந்தார். பின் திருப்புனவாயிலே வழி பட்டுச் சித்த நீ நினே என்னும் திருப்பதிகம் பாடித் துதித்துச் சோழநாட்டை யடைந்தார். பாம்பணிமா நகரிலுள்ள பாதாளச்சரம் முதலாகப் பல திருக் கோயில்களே வழிபட்டுச் சேர மான் பெருமாளுடன் திருவாரூரையடைந்து பரவையார் மாளிகையில் தங்கியிருந்தார்.

பலநாட் சென்றபின் சேரமான் பெருமாள் நாய ஞர், தம் தோழராகிய சுந்தரரை வணங்கித் தங்கள் நாட்டிற்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும்