பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 467

அடிப்பரப்பாகவும் கொண்டு ேத ர் ப் ப ந் த ம் ” (ரதபந்தம்) என்ற சித்திரக வியாக அமைத்துக் காட்டுதலும் உண்டு. எழுகூற்றிருக்கைச் செய்யுளைத் தேர்ப்பந்தத்தில் அமைத்துக் காட்டுங்கால் தேரின் மேற்பரப்பிலுள்ள முதல் ஏழு நிலங்களும் ஒன்றுமுதல் எண்னேறியிறங்கி ஏழிறுதியேறியது பேரேற்றம் எனவும், அடிபரப்பிலுள்ள பின்ன்ேழு நிலங்களும் அவ்வாறு ஒன்றிருக இறங்கியது பேரிக்கம் எனவும் வழங்கப்படும் என்பர் மாறனலங்கார உரையாசிரியர். இவ்விருமுறைகளிலும் செய்யுளிலமைந்த எண்கள் ஏழு கூறுகளாகவே அமைந்திருத்தலால் இதற்கு எழு கூற்றிருக்கை என்ற பெயரே பொருத்தமுடையதாகும்.

ஆளுடைய பி ள் ளே ய | ர் அருளிய திருஎழு கூற்றிருக்கை என்னும் பனுவல், நாற்பத்தேழடிகளால் இயன்ற இணைக்குறள் ஆசிரியப் பாவாக அமைந்துளது. இதனை எழு கூற்றிருக்கைக் குரிய மூல இலக்கியம் என்பர் சேக்கிழாரடிகள். எனவே இப்பனுவல், தமிழில் எழுகூற்றிருக்கை என வழங்கும் சித்திர கவிக்குரிய மூல இலக்கியமெனப் போற்றத்தகும் தொன் மையுடைய தென்பது நன்கு துணியப்படும். திருமாலடியாராகிய திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திரு எழு கூற்றிருக்கையும் பதினுெராந்திரு முறைப் பனுவல்களில் ஒன்ருய் நக்கீரதேவ நாயனுர் அருளிய திரு எழுகூற்றிருக்கையும் இங்ங்ணம் மதித்துப் போற்றத்தகும் தொன் மையும் சிறப்பும் ஒருங்கு வாய்ந்தனவாகும். யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக வந்துள்ள எருபொருட் கிருதுணி புரைத்தனே' என்னும் முதற் குறிப்புடைய பாடலும், மாறனலங்கார வுரையில் மேற்கோளாக வந்துள்ள ஒரு தனித்திகிரி என்னும் முதற்குறிப்புடைய பாடலும் *எழு கூற்றிருக்கை என்ற சித்திரக விக்கு உரிய பிற் கால இலக்கியங்களாகும்.

1. பெரிய திருஞான. 276