பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

பன்னிரு திருமுறை வரலாறு


பாணர், முன் போற் பயிற்சி வயத்தால் இதனே யும் யாழிலிட்டு வாசிக்கத் தொடங்கி, பின் இயலாமை யுணர்ந்து, இவ்வாறு யான் வாசிப்பேன் என முந்து தற்குக் காரணமாயிருந்தது இவ் யாழ்க் கருவி வன் ருே?’ என மனம் நடுங்கி அக்கருவியை முரிக்க முயன்ருர் என்பது வரலாறு. ஆதலின், அக்குறிப்பு நோக்கி இப்பதிகம் யாழ்முரி என்னும் பெயரெய்தியது எனக் கூறுதலும் உண்டு. எடுத்த இயலும் இசையும் இடையே முறிந்து வேறுபடும் இயல்பமைந்த முரி என்னும் இசைப்பா, யாழ் வினை முதலிய நரம்புக்கருவி களில் வைத்து எழுத்தெழுத்தாக வாசிக்க ஒண்தை தாய்ப் பாடலாளர்கள் வாயில்ை மட்டும் பாடுதற்கு உரிய அருமையுடையதாகும். இந் நுட்பத்தினே,

" மோந்தை முழாக்குழல் தாளமொர் வீணே

முதிர வோர் வாய்முரி பாடி’’ -تا س4 به مس 1) س {

என வரும் தொடரில் வாய்முரி என்னும் சொற்குறிப் பினல் ஆளுடைய பிள்ளேயார் உய்த்துணர வைத்த திறம் உண ரத்தக்கதாகும்.

இனி, யாழ்முரி என்ற இப்பதிகப்பெயரினே யாழ் மூரி என ஏடுகளில் எழுதினேரும் அவ்வாறே பதிப் பித்தவர்களும் உண்டு. மூரி என்ற சொல், வலிமை முரண் என்னும் பொருளுடையதாய் அடங்காதது" என்ற கருத்தில் வழங்குவது. இக்கருத்தே பற்றி யாழ்க் கருவியில் வைத்து இசைத் தற்கு அடங்காத இசை நலம் வாய்ந்த இத் திருப்பதிகம் யாழ் மூரி : என வழங்கப்பெற்ற தென்பது அன்னேர் கருத்தாக இருத்தல்வேண்டும். ஆயினும் இத்திருப்பதிகத்தின் இயலிசையமைதியினைப் புலப்படுத்தும் நிலயில் அமைந்த இப்பெயரின் தொன்மை வடிவம் யாழ்முரி

எனவே கொள்ளவேண்டியுளது.