பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைப் பாகுபாடு 33

சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் என்னும் இருவருள் முதிர்ந்த வயது உடையவர் திருநாவுக்கரசரென்பது எல்லார்க்கும் உடன்பாடாதலின், அவர் பாடிய பதிகங்களே முதலா கக்கொண்டு தேவாரத் திருமுறைகளே ஏன் முறைப் படுத்தி யெழுதுதல் கூடாது எனச் சிலர் வினவுதல் கூடும். ஒன்று முதல் ஏழுவரை யமைந்த இத் தேவா ரத் திருமுறைகளின் வரிசைமுறை அவ்வாசிரியர் களின் பிறந்தகுலம் வயது முதலிய உலகியல் முறை யினே ஒரு சிறிதுங் கருதாமல் அப்பெருமக்கள் இவ் வுலக வாழ்வினைத் துறந்து இறைவன் திருவருளிற் கலந்து வீடு பெற்ற கால அடைவினையுளத்துட்கொண்டு அமைக்கப் பெற்றதாகும். திருஞானசம்பந்தப் பிள்ளே யார் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணத்திற்கு வந்த அடியார் திருக்கூட்டத்தோடு சிவபெருமானது ஈறில் பெருஞ்சோதியினிற் புகுந்த சில ஆண்டுகள் கழிந்தபின்பே திருநாவுக்கரசர் திருப்புகலூரில் நண் ன ரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் எய்தி யின் புற்ருர் என்பது ஆசிரியர் சேக்கிழார் கருத்தாகும். இக்கருத்து திருநாவுக்கரசர் புராணத்தையும் திருஞான சம்பந்தர் புராண த் தையும் ஒருங்கு வைத்து ஆராய்வார்க்கு இனிது விளங் கும். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் என்னும் இருவருள் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானது திருவருளே இன்னிசைச் செந்தமிழ்ப் பாடல்களால் முதன்முதற் போற்றியவர் திருஞானசம்பந்தப்பிள்ளே யாரேயா வர். தேவாரத் திருமுறைகளுள் முதன்முதல் பாடப்பெற்ற பழமையுடைய திருப்பதிகம் தோடு டைய செவியன்’ எனத் தொடங்கும் திருஞான சம்பந் தப்பிள்ளையார் தேவாரமேயாகும். சிவபெருமானே இன்னிசைத் தமிழால் முதலிற் பாடிப் போற்றினமை யாலும் அப்பெருமான் திருவடியில் முதலிற் கலந்தமை யாலும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச்செய்த