பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 499

ஆல நீழ லுகந்த திருக்கையே யான பாட லுகந்த

திருக்கையே

தான தான தன ன தனதன தான தான தனன தனதன. எனவும், எண்சீரடிகளால் இயன்றன. 114, 115-ஆம் பதிகங்கள்.

துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டநஞ்

சடையதே

தான தா னனு தனதனு தான தான ைதனதனு. என அறுசீரடியால் இயன்றது 116-ஆம் பதிகம்.

சீர் வகையால் வேறுபட்ட இப்பதிகங்கள் நான்கும் இசைபற்றிய ஒசைத் திறத்தால் ஒத்திருத்தல்பற்றி ஒரே கட்டளேயாகக் சொள்ளத் தக்கனவாகும். இவற் றின் முதலடிகளாக மேற்காட்டிய அடிகளில் மெய் வினேயே’, பாகனே', 'இருக்கையே’, நஞ்சடையதே' என வரும் சொற்கள், முறையே மடக்கி வந்தமை காணலாம். அவற்றுள் மெய் என்பது உடம்பு உண் மைத்தன்மை எனவும், பாகன்' என்பது ஊர்தியாகக் கொண்டு நடத்துபவன் . ஒரு பாகத்திற்கொண்டவன் எனவும், இருக்கை' என்பது இருத்தல் - இருக்கு என்னும் வேதத்தினை எனவும், நஞ்சடையதே என் பது நல்ல சடையின் கண்னது, நஞ்சு அடையப் பெற்றது எனவும் இருவேறு பொருள்களிற் பயின் றுள்ளமை உணர் தற்குரியதாகும். இவ்வாறே இப்பதி கங்களிலுள்ள பாடல்களின் அடிதோறும் ஒரு சொல்லோ தொடரோ மடக்கிவந்து இயைபு' என்னும் தொடை நலம் பொருந்த யமகம், என்னும் சொல்ல ணிக்கு உரிய மூல இலக்கியமாய் அமைந்தமையால் இத்திருப்பதிகங்கள் திரு இயமகம்' எனப் பெயர் பெறு வன வாயின. இவற்றுக்குத் திரு இயமகம் என்ற இப் பெயர் சேக்கிழாரடிகள் காலத்திற்கு முற்பட்டு வழங்கிய தொன்மையுடையதாகும்.