பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 密ö篮

தலும், இவ்விரண்டடிகளையுமே முதலிலிருந்து வாசித் தாலும் இறுதியிலிருந்து வாசித்தாலும் ஒரே பாடலாக அமைதலும் காணலாம். கவுசிகப்பண்ணுக்கு உரிய தெனக் குறிக்கப்பெற்ற இப்பதிகம், முன் கவுசிகத் திற்கு உரியதென எடுத்துக்காட்டப்பெற்ற வீட லால வாயிலாய்” என்ற பதிகத்தினை ஓசை வகையால் ஒத்திருத்தல் உணரத் தக்கதாகும். இப்பதிகத்தினேப் பண் ணடைவு பற்றிக் கவுசிகப் பதிகங்களோடு சார வைத்தல் முறையாயினும் பண்ணமைதியினே மட்டும் நோக்காது சித்திரகவி யென்னும் சிறப்பொன்றே கருதி மாலைமாற்றுத் திருப்பதிகமாகிய இது திருவிய மகப் பதிகங்களின் பின் வைக்கப்பெற்றது.

புற நீர்மை

118 முதல் 123 வ்ரையுள்ள பதிகங்கள் புற நீர்மை என்ற பண் அமைந்தன. புல்லும் இசைப் புற நீர் மைக்கு ஒன்ருகப் போற்றிஞர்’ எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால் இவை ஆறும் ஒரே கட்டளையின் பாற்படும் என்பது நன்கு விளங்கும்.

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்

வன்னியும் மத்தமுஞ் சடைமேல்

தனதன தானு தானளு தனகு

தானகு தானகுனு தனணு

என வரும். விளம் மா விளம் மா விள ம் விளம் மா என

எழுசீர்க் கழிநெடிலடிகளால் இயன்றது. இதன் கட்டனே யமைப்பாகும்.

அந்தாளிக்குறிஞ்சி

124, 125-ஆம் பதிகங்கள் அந்தாளிக்குறிஞ்சி

என்ற பண்ணுக்கு உரியன. அந்தாளிக்கு ஒன்ருக்கி" எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இவ்விரு