பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

பன்னிரு திருமுறை வரலாறு


கின்ருன் என்றும், பாட்டிற் பண்ணுக இசைந்த அப் பரமன், தன்னை இன்னிசைச் செழும்பாடல்களா ற் பரவிப் போற்றும் மெய்யடியார்களுக்குத் தானே எளிவந்து முன் நின்று இன்னருள் வழங்குகின் ருன் என்றும் தேவார ஆசிரியர்கள் தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களிற் பலவிடங்களிலும் குறித்துப் போற்றி புள்ளார்கள்.

இயல் இசை நாடகம் என்னும் மூன்று துறை களிலும் வளம் பெற்று வளர்ந்த தமிழ் மொழியானது, பழத்தினிற் சுவையும் கண் ணிடை மணியும் போன்று இசை வளர்ச்சிக்கு இன்றியமையாததாய்ப் பண்ணி டையே கலந்து நின்று இசைக்குச் சுவையும் ஒளியும் தரவல்லதாகும். இந்நுட்பம்,

  • பண்ணினர் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்

கண் ணிஞர் பார்வையாகி’ (4–70–4) எனத் திருநாவுக்கரசரும்,

"பண் ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய்’ (7–29-6) என நம்பியாரூரரும் இறைவனே உவமித்துப் போற்று தலால் இனிது விளங்கும். ஞானத்திரளாய் நின்ற பெருமான் பண்ணுகவும் பண்ணகத்தே இனிய ஓசை யினையுடைய தமிழின் உருவாகவும் திகழ்கின்ருன் என்பது,

"பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்

உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றும்சுடர் மூன்றும் விண்ணும் முழு தானிைடம் விழிம்மிழலேயே’ (1-11-4)

‘என்னைவன் இசையானவன்' (1–16-6) 'இயலும் இசையானே? 'பாவின் இசைக் குழகர்’ (3–46–3)

என ஆளுடைய பிள்ளையாரும்,