பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592

பன்னிரு திருமுறை வரலாறு


அவைக்களப் புலவராக விளங்கியவர் சாரங்கதேவர். இவர் தமிழ்நாட்டில் யாத்திரை செய்து இங்கு வழங் கும் தேவாரப் பண்களே நன்குணர்ந்தவர். இவர் தாம் இயற்றிய சங்கீத ரத்தகைரம் என்னும் இசைநூலில் தேவாரப் பண்கள் சிலவற்றின் இலக்கணங்களைப் பொன்னே போல் போற்றி வைத்துள்ளார். தக்க ராகத்தின் விபாஷையாகிய தேவாரவர்த்திநீ என்றும், மாளவ கைசிகமாகிய தேவார வர்த்த நீ என்றும் தக்க ராகம், கெளசிகம் ஆகிய தேவாரப்பண்களே இவர் முறையே குறித்துள்ளமை காணலாம். எனவே தேவாரத் திருப்பதிகங்களை முன்னேர் வகுத்த பண் முறைப்படி இக்காலத்திலும் பாடிக்கேட்டு மகிழ்தற் குரிய வழிமுறைகளே ஆராய்ந்து மேற்கொள்ளுதற்குச் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தகைரம் பெரிதும் துணை புரியுமெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

தேவாரப் பதிகங்களுக்குப் பண்வகுத்த காலத்து இசை முறையும் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தனகரத்திற் கூறப்பட்ட தேவாரப் பண்களின் இசைமுறையும் இடைக்காலத்து இசைமரபு எனப் படும். இவ்விசைமரபு கி. பி. 16-ஆம் நூற்ருண்டுவரை தமிழ்நாட்டில் அழிவெய்தாதிருந்தது. பின்பு தஞ்சை யில் மகாராட்டிர ஆட்சியில் ஏற்பட்ட பிறநாட்டு இசைக்கலப்பினுலும் பிறமொழி யிசைப்பாடல்களைப் பாடும் பழக்கம் இசைவாணர்பால் பெருக நிலைபெற்ற மையாலும் இசைத் தமிழ்ப் பனுவல்களாகிய தேவாரத் திருப்பதிகங்களே அவற்றிற்குரிய பண் முறையிற் பாடும் முறை மறந்து பழைய தமிழ்ப் பண்ணுருவங்கள் சிதைந்து மறையும் நிலேயையெய்தின. எனவே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்களே அவற்றுக்குரிய பண்களிற் பாடும் தலேமுறையினராகிய இசையாளர் அருகினர். எனினும் திருக்கோயில்களிலும் திருமடங்