பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் திருமுறைத் தொண்டு 43

வேண்டும். இதல்ை இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் தேவாரம் என்ற சொல் திருமுறையாகிய இசைப்பாடலேயே குறித்து வழங்கியதென்பது நன்கு புலனுதல் காணலாம். கி. பி. 13-ம் நூற்ருண்டில் வாழ்ந்த வடநாட்டு இசைநூலாசிரியரான சாரங்க தேவரென் பார் தாம் இயற்றிய சங்கீத ரத்னுகரம் என்ற வடமொழி இசை நாலில், மூவர் திருப்பதிகங் களிற் காணப்படும் தமிழ்ப் பண்கள் சிலவற்றைத் தேவாரவர்த்த நீ என்னும் அ ைட மொ ழி யு ட ன் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பினே ஊன்றி நோக்குங் கால் அவ்வாசிரியர் வாழ்ந்த காலமாகிய கி. பி. 13-ம் நூற்ருண்டிற்கு மு ன் பே மூவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் சிறப்பித்து வழங்கப்பெற் றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

தேவபாணி யென் ருற்போலத் தெ ய் வத் ைத ப் பரவும் இசைப்பாடல் என்ற பொருளில் வழங்கியதே தேவாரமென்னும் பெயரென்பதும், இறைவனேப் பண் ணுர்ந்த இசையாற் பாடிப் போற்றுதற்கேற்ப அமைந் தவை மூவர் திருப்பதிகங்களாதலின் இவை தேவாரம் என வழங்கப்பெற்றன வென்பதும், தெய்வ இசைப் பாடல்களாகிய இவை இறைவழிபாட்டிற்கு இன்றி யமையாச் சாதனமாக அமைந்தமை கருதி இவற்றுக்கு வழங்கிய தேவாரமென்ற சொல் வழிபாடு என்னும் பொருளிலும் வழங்கப்படுவதாயிற்றென்பதும் மே ல் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் நன்கு புலனுதல் காணலாம்.

முதல் இராசராச சோழன் திருமுறைத் தொண்டு

முதல் இராசராச சோழனுட்சியின் 6-ஆம் ஆண் டில் திருநல்லம் கோயிலில் நாடோறும் திருப்பதிகம் பாட இருவர்க்கு நிலமளித்த செய்தி அவ்வூர்க் கோயி லிற் பொறிக்கப்பட்டுள்ளது. இ. ப் பெ ரு வே ந் த ன து ஆட்சியில் அரசியலதிகாரியாயிருந்த பொய்கைநாடு