பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 64%

இரண்டாந் திருமுறையில் 70, 78-ஆம் பதிகங்கள் இரண்டும் சக்கரமாற்று' என்னும் மிறைக் கவியாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பிரமனுர் வேணு புரம் என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம், ஆளுடையபிள்ளையார், பாண்டிமா தேவியார் வேண்டு கோட் கிரங்கித் தென்னவனது வெப்பு நோயை நீக்கும் பொருட்டு எழுந்தருளியபோது, முன்னே த் தவப் பயனுல் கவுணியப் பிள்ளே யாரைக் காணப்பெற்ற தென் ன வன், அவரை நோக்கித் தேவரீருடைய ஊர் யாது?’ என வினவ, அதற்கு விடை கூறும் முறையில் 'பிரமபுரம் முதலாகப் பன்னிரு திருப்பெயர்களையுடைய திருக்கழுமலமே நாம் பயிலும் ஊர் எனப் பிள்ளே யாரால் அருளிச் செய்யப்பெற்றதாகும். இத்திருப் பதிகத்தின் முதற் கண் அமைந்தது. பிரமனுரர் வேனுடிரம் புகலி வெங்குருப் பெரு நீர்த்தோணி புரமன் னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன் மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் காதியாய பரமனுார் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமல நாம் பரவுமூரே, என்ற திருப்பாட்டாகும். இம் முதற்பாடலில் 1. பிரமனுரர், 2. வேணுபுரம், 3. புகலி, 4. வெங்குரு, 5. தோணிபுரம், 6 பூந் தராய், 7. சிரபுரம், 8. புறவம், 9. ச ண் ைப. 10. காழி, 11. கொச்சைவயம், 12. கழுமலம் என இம் முறையே எண்ணப்பெற்ற பன்னிரு திருப்பெயர்களும் இவ்வெண்ணு முறைப் படியே இத் திருப்பதிகத்தின் ஒன்று முதல் பன்னி ரண்டு வரையுள்ள பாடல்களின் முதற் பெயர்களாக அமைந்துள்ளன. இவ்வாறு முதற்பாடலில் குறித்த பன்னிரு பெயர்களும் நிரலே அப்பதிகத்தில் 1 முதல் 12 வரையுள்ள பாடல்களின் முதற் பெயர்களாக நின்று ஒரு வட்டமாக அமையும்படி அப் பெயர்களே மாற்றினமையால் இது சக்கரமாற்று' என்னும் பெயர்த் தாயிற்று.