பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை வழிபாடு 55

முன்னிலையிற் கூடிய சிவனடியார் பேரவையில் விரித் துரைக்கும்பொழுது முற்கூறிய பதிைெரு திருமுறைக ளும் உறுப்பாகத் தாம் இயற்றிய செய்யுள் உடலாக அதற்குப் பொருள் விரித்துரைத்தாரென்பது வரலாறு. தி ரு த் தொ ண் டர் புராணமெனப் புராணத் திரு முறைக்குத் திருநாமம் சீர்பெற அமைத்திட்டு (51) எனவும் தெள்ளுதமிழ்ச் சேக்கிழார் புராணஞ் செய்த திருமுறையை எனவும் திருத்தொண்டர் புராண மெழுதிய முறையை மறையோர் சிவமூலமந்திரத்தால் அருச்சனே செய்திறைஞ்சி எனவும் செறிமதயானைச் சிரத்தில் பொற்கலத்தோடெடுத் துத் திருமுறையை இருத்தி' எனவும் வருஞ் செய்யுட்களில் பெரிய புரா ணத்தைத் திருமுறையென்ற பெயரால் உமாபதி சிவா சாரியார் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

மூவரோது திருமுறைகளேழு, திருவாதவூரர்

முறையொன்று, இசைப் பாவரைந்த முறையொன்று, மூலர் முறையொன்று,

பாசுரம தாதியாக்

கோவை செய்த முறையொன்று, சேவையர் குலாதி

நீதிமுறை யொன்றுடன் பாவை பாகர் திருவருள் சிறந்தமுறை பன்னிரண் டென வைத்தபின்

என அவ்வாசிரியர் கூறுதலால் சைவத் திருமுறைகள் பன்னிரண் டென வழங்கும் வழக்கம் அவர்க்கு நெடுங் காலத்திற்கு முன்பே இத் தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதென்பது நன்கு தெளியப்படும்.

பன்னிரு திருமுறையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர்கள் பத்தாந் திருமுறையாகிய திருமந்திர மாலேயை இயற்றிய திருமூலரும் பதினெராந் திரு முறையிற் காணப்படும் சில பிரபந்தங்களேப் பாடியரு ளிய காரைக்கால் அம்மையாரும் ஆவர். இவர்கள் இத் தமிழகத்தில் தோன்றி வாழ்ந்த காலம் கி. பி. ஐந் தாம் நூற்ருண்டாதல் கூடும் என ஆராய்ச்சியாளர்