பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748

பன்னிரு திருமுறை வரலாறு


வி. கு பிரியமாட்டா விமலனுக்கடுத்த தென்குே எனக் காளத்தியப்பரது கண்ணிற் குருதி கண்டு கண்ணப்பர் இரங்கியதாகச் சேக்கிழாரடிகள் கூறும் தொடர்ப்பொருள் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கதாகும்.

39. திருமடங்களில் தங்கித் திருத்தொண்டு புரியும் அடியார்களின் உள்ளத்தே இறைவன் அகலாது எழுந்தருளியிருக்கும் அன்பின் திறத்தை,

மடமன்னும் அடியார்கள் மனத்திலுள்ளார் (8-10-8) எனவரும் தொடரில் திருநாவுக்கரசர் குறித்துப்போற்றி புள்ளனர்.

அப்பரடிகள் அருளிய இத்தொடர்ப் பொருளே அடி யொற்றியமைந்தது,

மடமுடைய அடியார் தம் மனத்தேயுற விடமூடையமிடறன் . 7-81-6

என வரும் சுந்தரர் திருப்பாடலாகும்.

40. இறைவன் உயிர்களின் பொருட்டுச் செய் தருளும் படைத்தல் முதலிய ஐந்தொழில்களேயும் பந்தம் வீடு என இரண்டாக அடக்கி, பந்தமும் வீடும் பரப்புகின்றீர் எனப் போற்றினர் திருநாவுக்கரசர்.

இவ்வாறே சுந்தரரும் பந்தம் வீடு இவை பண்ணினிர் (7.88.4) என இறைவனைப் போற்றி புள்ளார். இவ்விருபெருமக்கள் வாய்மொழியையும் * பந்தம் வீடு தரும் பரமன் (பெரிய-300) என்ற தொடரில் சேக்கிழாரடிகள் கு றி த் து ஸ் ள ைம காணலாம்.

41. கருமானின் உரியதளே உடையா வீக்கி..........

ஆடுகின்ற பெருமானப் பெரும்பற்றப் புலியூரான (8.1-3)