பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 819

  • புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு ’

என்ற திருக்குறளாகும். துச்சிலிருத்தல்-ஒதுக்குக் குடி யிருத்தல்.

  • தாயு நீயே தந்தை நீயே சங்கரனே யடியேன்

ஆயுநின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்ற துள்ளம் ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின் ருென்ற லொட்டார் மாய மேயென் றஞ்சுகின்றேன் வலிவலமேயவனே?

(1-50-7)

என ஆளுடைய பிள்ளே யாரும்,

  • முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை

அப்பர் போல் ஐவர் வந்து அது தரு கிதுவிடென்று ஒப்பவே நலியலுற்ருல் உய்யுமாறறிய மாட்டேன் செப்பமே திகழுமேனித் திருப்புக லூரனிரே (4-54-3)

  • சாற்றுவர் ஐவச்வந்து சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் கனலப்பேசிக் கண்செவி மூக்கு வாயுள் ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை யறிவொன்

றின்றிக் கூற்றுவர் வாயிற்பட்டேன் கோவல் வீரட்டனிரே

(4,69–4)

காச்செய்த காயந்தன்னுள் நித்துலும் ஐவர்வந்து

கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்

விரட்டனிரே (4-69-6)

எனத் திருநாவுக்கரசரும்,

  • சொல்லிடில் எல்லேயில்லே சுவையிலாப் பேதை வாழ்வு

நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தேனல்லேன்

(7–8–4)