பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பன்னிரு திருமுறை வரலாறு


ளத்துள்ளே பொழிந்தெழுந்த உயர் ஞானத் திருமொழி யால், அருமறைப் பொருள்களாகிய உயர்ந்த உண்மை களேயெல்லாந் தமிழ்மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளுதற் பொருட்டு, அளவற்ற மந்திரங்கட்கு மூல மாகிய ஓங்காரத்தினைத் தமிழென்னும் பெயரின் முதல் நிலேயாகிய தகர மெய்யுடன் இயைத்துத் தொடங்கிய எழுதுமறையாகிய வளமார்ந்த செந் தமிழ்ப் பாடல் களால் உலக மக்களுக்கு மெய்ப்பொருளுணர்வு சிறக் கத் தாம் பாடும் திருப்பாடல்கள் அம்மையப்பரது திருச் செவியிற் சென்று சாரும் தகுதி பெறுதற்கு இறைவரது இடப்பாக த்தமர்ந்த உமையம்மையாரது தோடணிந்த திருச்செவியைச் சிறப்பித்து,

தோடுடைய செவியன் விடையேறியோர்து வெண்மதிசூடி காடுடைய சுடலேப்பொடி பூசியென் உள்ளங்கவர்கள்வன் ஏடுடைய மலரான்முனே நாட்பணிந்தேத்தவருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே:

என்ற திருப்பாடலே முதலாகவுடைய திருப்பதிக த் தைப் பாடி எம்மை இது செய்தபிரான் பிரமாபுர மேவிய பெம்மா ன் இவனே எனத் தம் தந்தையார்க்கு அடையாளங்களுடன் குறிப்பிட்டருளினுர்.

மண்ணுலகில் வாழ்வார்கள் அறியாமையாற் பிழை செய்தாலும் பின் தமது தவறுணர்ந்து இறை வனே உளமுருகிப் போற்றி வழிபடுவாராயின் இறைவ னது திருவருள் அவர்களே உய்விக்கும் என்ற உண் மையை அறிவுறுத்தக் கருதிய பிள்ளேயார், இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தை ஆராயாது எடுக்க முயன்ற இராவணன் அம்மலேக்கீழ் அகப்பட்டு வருந் தித் தன் தவறுணர்ந்து இன்னிசைப்பாடலால் இறை வனப் போற்ற, இறைவன் அவனுக்கு அருள் புரிந்த பெருங்கருணேத் திறத்தினை இத் திருப்பதிகத்தின் எட் டாந் திருப்பாடலில் எடுத்துரைத் தருளினர். இறை