பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 825

மெய்யுணர்வு பெற்ற சான்ருேர்களேயே ஐயத்தி னிங்கித் தெளிந்தார் எனத் தெய்வப் புலவர் குறித் துள்ளார். இங்ங்னம் தெளிவுடையார் சிந்தையிலேயே இறைவன் தேற்றமுற எழுந்தருளி நலம் புரிந்தருள் கின் ருன் என்பது,

சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி வந்தநன் பயனுமாகி வாணுதல் பாகமாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென்

கரைமேல் மன்னி

அந்த மோடளவிலாத அடிகள் ஆப்பாடியாரே

[4–48–5]

என அப்பரடிகள் அருளிய திருப்பாடலால் இனிது விளங்கும். ஐயத்தின் நீங்கித் தெளிவு பெருதார், இறைவன் திருவருளேயுணர்ந்து இன்புறுதலியலா தென்பது,

சங்கையவர் புணர்தற்கரியான் ’ [7-10-9]

எனவும்,

  • சங்கைப்பட நினையாதெழு நெஞ்சே : [7-71-5]

எனவும் வரும் நம்பியாரூரர் வாய்மொழியால் நன்கு புலனும்,

உலகெலாம் இயக்கும் முழுமுதற் பொருள் ஒன்றே எவ்வுயிர்க்கும் உயிராய் உடன் நின்று அருள்புரிகின் றது என்னும் தெளிவுடைய சிந்தையராய் மெய்ப் பொருளாகிய அவ்விறைவனே வழிபடாதார் எத்தகைய கலேஞானமும் உள்ளத்து ஒண்மையும் உடையரா யினும் அன்னேரைத் தெளிந்த நல்லறிவுடையதாகச் சிவஞான ச் செல்வர்கள் மதிக்கமாட்டார்கள் என்பது,