பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 845

வேளாளரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந்

தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே (2-42-3) எனவரும் திருப்பாடலாகும். இதன் கண். வள்ளன்மை யால் மிக்கு இருக்கும் என்ற தொடர் வேளாண்மை யென்னுஞ் செருக்கு ’ என்பதற்குரிய உரை விளக்க மாகவும், வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந் தாளாளர் ' என அமைத்த சொன் முடிவு, வேளாண்மை என்னுஞ் செருக்கு தாளாண்மை என் னும் தகமைக்கண் தங்கிற்று எனவரும் திருக்குறள் சொன் முடிவின் விளக்கமாகவும் அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

மக்க ள சொல்லேயன்றி ர்கள் செய்யும் செயலும் உள்ளத் தூய்மையுடன் கூடியிருத்தல் வேண்டும் என வற்புறுத்துவது விக்னத்துய்மை’ என்னும் அதிகாரம். தீய செயல்களாற் பொருளே ச் சேர்த்து அப்பொருளைக் கொண்டு இன்பமான நல் வாழ்வைப் பேணிக்கொள்வதென்பது சுடப்படாத பசுமட் பாண்டத்திலே தண்ணிரை நெடுங்காலம் நிறைத்து வைத்திருத்தலே யொத்து, செய்தவனும் பொருளும் சேரக்கெடுதற்கு ஏதுவாகும் என்பார்,

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணிர் பெய்திரீஇ யற்று” [660)

என்ருர் திருவள்ளுவர். குற்றமின்றி வருகின்ற நமது குடிப்பிறப்பின் தூய்மையோடு ஒத்து வாழ்தலே நமது கடமையெனக் கருதி வாழும் பெருமக்கள், தாம் வறுமையுற்ற பொழுதும் வஞ்சனையைப் பொருந்தித் தமக்கு அமைவில்லாதன வாகிய தீச்செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பதனே,

சலம்பற்றிச் சால்பில் செய்யார் மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார்’ [956]