பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 69

கூடியதேயாகும். ஆளுடைய பிள்ளே யார், முதன் முதல் திருவாய்மலர்ந்தருளிய தோடுடைய செவியன் என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்திற் பாடல் தோறும் சிவபெருமானே அடையாளங்களுடன் கூறி, “எனது உள்ளங்கவர்கள் வன் .....பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே எனத் தெளிவாகச் சுட்டிக் காட்டுதலானும், தமக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவபெருமான் பிரமதீர்த்தக் கரையில் எழுந்தருளி வந்த எளிமைத் தன்மையினேயும் அவனருளால் ஒரு நெறிய மனம் வைத்துணரும் சிவஞானத்தினேயும் அதன் பயனகத் திருநெறிய தமிழ்பாடும் ஆற்றலேயும் தாம்பெற்று மகிழ்ந்ததிறத்தினையும்,

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மானிவன்றன்னே ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்த னுரைசெய்த திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினே தீர்தலெளிதாமே.

என வரும் திருக்கடைக்காப்புப்பாடலில் தெளிவாகக் குறிப்பிடுதலானும் தோடுடைய செவியன்’ என வரும் இத்திருப்பதிகம் உமையம்மையாரளித்த ஞானப் பாலேப் பருகி நின்ற ஆளுடைய பிள்ளேயார் யாரளித்த பாலடிசில் உண்டனே, எச்சில் மயங்கிட நினக்கு ஈது இட்டாரைக் காட்டுக’ என வெகுண்டுரைத்த தந்தை யாரை நோக்கி எம்மையிது செய்தபிரான் இவ னன்றே என அடையாளங்களுடன் காட்டும் நிலையிற் பாடியருளியதென்பது நன்கு புலனுகும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் தமது இளம்பருவத் தில் நிகழ்ந்த வியப்புடைய நிகழ்ச்சியாகிய இதனைப் பின்னெரு காலத்தில் நினைந்து போற்றும் நிலையில் தாம் பாடிய திருப்பதிகமொன்றில் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார். குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் என்னும் இருவரது வேண்டுகோட் கிணங்கித் தென்ற