பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1021

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் ####

தெளிவாகக் குறித்துள்ளார்கள். எனவே ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றும் உணர்வுடையதன்றென் பதும், உயிர்கள் செய்யும் நலன் தீங்குகளாகிய இருவினை களுக்கேற்ப அவற்றின் பயன்களை வகுத்து, அவ்வவ் வுயிர்கள் செய்த வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகருமாறு நுகர்விக்கும் முதல்வைெருவன் உளனென் பதும் தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்ருேர் துணிபாதல் புலனுகும். தமிழகத்திற் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே நிலைபெற்று வழங்கிய இவ்வுண்மையினே,

'சேய் வினையுஞ்செய்வானும் அதன் பயனுஞ் சேர்ப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி பல்லவற்றுக் கில்லேளன உய்வகையாற் பொருள் சிவனென் றருளாலே

உணர்ந்தறிந்தார் ’’ (பெரிய - சாக்கிய - 5; எனவரும் செய்யுளில் சேக்கிழாரடிகள் தெளிவாக விரித் துரைத்தமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனர் வகுத்துரைத்த தமிழ்ப் பொருளிலக்கண மரபினை அருண்மெ ழித் தேவராகிய சேக்கிழாரடிகன் தான் இயற்றிய திருத்தொண்டர் புராணத் தில் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். திருக்குறிப்புத் தொண்ட நாயஞர் புராணத்தில் திருத்தொண்டை நன்குட்டு நானிலத்து ஐந்தினை வளங்களேயும் ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும்.

காடுறையுலகம், மைவதையுலகம், தீம்புனலுலகம், பெருமனலுலகம் என நிலத்தை நான்காகப் பகுத்து அந் நால்வகை நிலங்களுக்கும் அகனைந்திணைகளுள் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நால்வகையொழுக்கங் களையும் உரிமை செய்துணர்த்திய தொல்காப்பியர், நில மில்லாத பாலேத்திணைக்கு, .

நடுவுநிலைத் தினையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே ’’

(தொல் - அகத் - 11) எனவரும் நூற்பாவில் இடமும் காலமும் வகுத்துக் கூறி யுள்ளார். முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என