பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1035

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் #Öig

ஈடாகத் தன்னுடம்பினையே அரிந்து கொடுத்துத் தானே துலாத்தட்டில் ஏறிய சிபி என்னும் சோழ மன்னனது சீர்த்தியினை,

அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரைபுக்க வரையா ஈகை உரவோன் ' (புறம் - 43) எனவும்,

புறவுநிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன் (சிலப் - வாழ்த்து - 17) எனவும் பண்டைப் புலவர் பெருமக்கள் பாராட்டியதனை உளங்கொண்ட சேக்கிழாரடிகள்,

துலையிற் புறவின் நிறையளித்த சோழர் (பெரிய-கோச்செ-1) என ச் சோழர் குடியின் பெருமையினைக் குறித்துள்ளார்.

புகழெனின் உயிருங் கொடுக்குவர் (புறம் . 182) எனவரும் தொடர்ப் பொருளுக்கு இலக்கியமாக அமையும் நிலையில்,

  • மருவார் மேல் மன்னவற்கா மலையப்போங் கலிப்பகையார்

பொருவாரும் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப்

புகழ் கொண்டார் (பெரிய - திரு.ந - 30) எனக் கலிப்பகையார் செயலை ஆசிரியர் குறித்துள்ளமை அறியத்தகுவதாம்.

தமிழ் நாட்டில் முடிபுனைந்து ஆட்சிபுரியும் பெரு வேந்தர்களாகச் சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் குடியிற் பிறந்தவர்களையே தமிழ்மக்கள் தொன்று தொட்டுப் போற்றி வந்துள்ளார்கள். இம் மரபு,

முடிகெழு வேந்த மூவர்க்கும் உரியது' (சிலப்பதிகாரப்

பதிகம்)

எனவும்,

  • முடிமன்னர் மூவரும் காத்தோம்புந் தெய்வ

வடபேரிமயமலை ' (சிலப் - வாழ்த்துக் - 2) எனவும் வரும் தொடர்களால் அறியப்படும். சுந்தரமூர்த் தி வாமிகள் தாம் திருப்பரங்குன்றத் திறைவனைப் பாடிய பதிகம் சேர சோழ பாண்டியர்களாகிய, முடிவேந்தர்

థ్ర