பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பன்னிரு திருமுறை வரலாறு


தேன் புக்க தண்பன சூழ் தில்லைச் சிற்றம்பலவன் 'i

செறிபொழில் சூழ்தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம் 12 எனவரும் திருவாசகத் தொடர்களாலும் நன்கு விளங்கும். இங்கெடுத்துக் காட்டிய குறிப்புக்களால் தில்லை நகரத்திற் கும் கீழ்கடலிற்கும் உள்ள தொலைவு தேவார ஆசிரியர் காலத்திலும் மாணிக்க வாசகர் காலத்திலும் வேறுபட்ட தில்லை யென்பது தெளிவாகப் புலப்படுதலால் தேவார ஆசி ரியர் மூவர்க்கும் மாணிக்க வாசகர் காலத்தால் முற்பட்டவர் என்பதற்குத் திருக்கோவையாரிலுள்ள நெய்தனில வரு ணனையைச் சான்ருகக்கொள்ளுதல் பொருந்தாதென்பது புலளும்.

(7) சாக்கிய நாயனுர், இடைக்காடர், காரைக்காலம்மை

யார் முதலிய அடியார்களே எடுத்தோதிய கல்லாடம் தேவார

  • تپہ - - تحتتي - ஆசிரியர் மூவரையும் பாண்டும் குறிப்பிடாமையால் அந்நூல்
  • * ༦༠་དང་ཆེ་བ་མ་ أسس سمع .سي فة " தோன்றிய காலம் தேவா ஆசிரியர்க்கு முன் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டின் இறுதி -

'யும் ஆளும் நூற்ருண்டின் ெ தாடக்கமு மாமென்றும், ஆகவே ஆக்கல்லாட நூலிற் போற்றிப்

ية تتب؟

புகழப்பட்ட மணிவாசகர் அம்மூவர்க்கும் முந்தியவரென்பது

گفت:

பெறப்படுமென்றும் மறைமலையடிகள் கூறுவர்.

திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியனுக்கு வெப்புத் தீர்த்த திருவிளையாடல், அக்காலத்து ச் சமணர் கழுவேறி னது, சேரமான் பெருமாள் நாயனுர் காலத்தில் ஆலவா யிறைவன் பாணபத்திரர் பொருட்டுச் சாதாரி பாடியது ஆகிய இத்திருவிளையாடல்களெல்லாம் இறைவன் இயற் றிய அறுபத்து நான்கு திருவிளையாடலுள் அடங்கும் என்பவாதலின் "எட்டெட்டியற்றிய கட்டமர் சடையோன்' " என்ற தொடரால் அவ்வறுபத்து நான்கு திருவிளையாடல் களேயுந் தொகுத்துக் கூறிய கல்லாட நூலானது திருஞான சம்பந்தர் முதலிய தேவார ஆசிரியர் காலத்திற்கு மிகவும் பிற்பட்டதென்பது துணியப்படும். சுந்தரர்க்குத் தோழராகிய சேரமான் பெருமாள் நாயனுர் நடராசப் பெருமானது திருச் சிலம்பொலி கேட்ட வரலாற்றையும் ஆலவாயிறைவர் 彗*蕊°

பத்திரர் பொருட்டு அவ்வேந்தர் பெருமானுக்குத் திருமுகப்

1. திருவாசகம் - திருச்சாழல் 14.

2. திருவாசகம் - கண்டபத்து 3.

3. கல்லாடம் 97-ம் செய்யுள் 14-ஆம் அடி